எலுமிச்சம்
பழத்தை மாந்திரீகத்திற்கு ஏன்
பயன்படுத்துகின்றனர் என்று தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் அறுபதுக்கும்
மேற்பட்ட எலுமிச்சம் பழ வகைகள் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் நமக்கு தெரிந்ததும்
நாம் பயன்படுத்துவதும் இரண்டு வகைகள்தான். ஒன்று நாட்டு எலுமிச்சம் பழம் மற்றொன்று
கொடி எலுமிச்சம் பழம்.
எலுமிச்சம் பழத்தை சர்பத் போட்டு
குடிப்பதும் ஊறுகாய் போடவும் பல வகைகளில் உணவாக பயன்படுத்துவதையும் நாம் அறிந்ததே மேலும்
வைத்தியத்திற்கு பயன்படுத்துவதையும் நாம் அனைவரும் நன்கு அறிந்த விசயம்தான்.
அடுத்து சுப காரியங்களுக்கு பயன்படுத்துவதில்
எலுமிச்சம் பழத்திற்கே முதலிடம் எலுமிச்சம் பழத்தை திருஸ்டி களிக்கவும் மற்றும்
மந்திர தந்திர வேலைகளுக்கும் பயன்படுத்துவதையும்
நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் எலுமிச்சம்
பழத்தை மட்டும் ஏன் பயன்படுத்துகின்றனர்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்
உங்களுக்கே புரியும். உலோகங்களுக்கு மட்டும்தான் மந்திரங்களை
உள்வாங்கும் சக்தி உண்டு அதுவும் குறிப்பாக தங்கம் வெள்ளி செம்பு இந்த மூன்று
உலோகங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இன்னம் கொஞ்சம் விபரமாகவே சொல்கிறேன். யந்திரம் மற்றும் தாயத்து பற்றி நீங்கள்
அறிந்ததுதான். இவை இரண்டையும் உலோக தகடுகளில் மந்திரங்களை உரு ஏற்றி செய்கின்றனர்.
தங்க தகட்டில் மந்திரங்களை உரு ஏற்றினால் நீண்ட காலம் பயன்படுத்த முடியும் என்றும்
வெள்ளி தகட்டில் மந்திரங்களை உரு ஏற்றினால் தங்கத்தைவிட குறைவான காலமும். செம்பு தகட்டில் மந்திரங்களை உரு
ஏற்றினால் தங்கம் மற்றும் வெள்ளியைவிட குறைவான
காலம்தான் மந்திரங்கள் பயன்தருமாம். உலோகத்திற்கும் மந்திரத்திற்கும் உள்ள தொடர்பு
இப்போது புரிந்திருக்கும்.
எலுமிச்சம்பழத்தில் செம்பு சத்து அதிகமாக இருக்கும்
காரணத்தினால்தான் மந்திர தந்திர வேலைகளுக்கு எலுமிச்சம்பழத்தை
பயன்படுத்துகின்றனர். என்பது இப்போது புரிந்திருக்கும்.