வெள்ளைப் பாஷாணம்
(WHITE ARSENIC) or (ARSENIC ACID)
பூமியில் இயற்கையாக உற்பத்தி ஆகிறது. இப்பாஷாணம் கலப்புகள் இல்லாமல் தனியாகவும் கிடைக்கும். பெரும்பாலும் தாமிரம், அயம், கெந்தகம் முதலிய மற்ற உலோகங்களுடன் கலந்துதான் கிடைக்கிறது.
இது சீமைச் சுண்ணாம்புபோல் இருக்கும், தோலில் பட்டால் தடிப்புண்டாகும். தண்ணீர் பட்டால் உள்ளுக்கு இளுத்துக்கொள்ளும் (தண்ணீரை உறிஞ்சிவிடும்) நெருப்பில் இட்டால் புகையும், வெள்ளைப்பூண்டு மணம் வீசும்.
இயற்கைச் சரக்கு இப்போது கிடைப்பதில்லை இதைப்போன்று உள்ள சங்குப் பாஷாணத்தைத்தான் இதற்குப் பதிலாக பயன்படுத்துகின்றார்கள்.
" வெள்ளைப்பா டாணம் விடங்கடிதீ ரும்பூசக்
கொள்ளைச் சுரந்தோடங் கோரசந்தி---தொள்ளையுறு
நாசிப்புண் வாய்ப்புண் ணனைகிரந்தி போமுண்ண
வாசிக்குங் கும்பமுலை யாய்."
உடலைத் தேற்றும், நரம்புத்தளர்ச்சி நீக்கும், சுரத்தை போக்கும், நச்சுக்கடி, வாய்ப்புண் கிரந்தி, சன்னி, கொள்ளைக் காய்ச்சல், யானைக்கால் நோய், தோல்வியாதிகள் போக்கும். இதயம், நுரையீரல், குடல், பிறப்புறுப்புகள் முதலியவற்றை தூண்டும் தன்மையும் உண்டு. உடல் தாதுக்களுக்கு வலிமையை உண்டு பண்ணி நோய் அணுகாமல் பாதுகாக்கும்.
யுனானி மருத்துவத்திலும், மேனாட்டு மருத்துவத்திலும் இதைப் பயன்படுத்துகின்றனர்.