காரீயம்
(PLUMBUM or BLACK LEAD)
காரீயம் பூமியில் இயற்கையாக கிடைக்கின்றது. மலைகளில் இருந்து வரும் அருவிகளில் அணு அணுவாக மணலுடனும், சிறு கற்களுடனும் கலந்து கிடைக்கின்றது.
ஈயம், காரீயம், கருநாகம், கருவங்கம், சீசம் என பல பெயர்கள் உண்டு. கைப்புச் சுவையுடையது இது வெப்ப வீரியமுடையது. பசியைத் தூண்டுதல், கிருமிகளைக் கொல்லுதல், சிறுநீரைப் பெருக்குதல் முதலியவற்றை உண்டாக்கும்.
" பன்மரநஞ் சக்கிநோய் பாகர்த் தபிவிரணங்
குன்மங்கால் சூலங் குதவிரணஞ்--சன்மப்
பெருநாக மேகப் பிணிசுரமி வற்றைக்
கருநாக மேநீக்குங் காண்."
தாவரங்களால் உண்டாகும் நச்சுத் தன்மை, கண் நோய்கள், குன்மம், வாத நோய், சூலை, பவுத்திர ரணம், குட்டம், மேகப்பிணி, சுரம் முதலிய நோய்களைப் போக்கும்.
அப்பிரகம், அண்டம், அயம், கல்லுப்பு, கெந்தி, காந்தம், கிளிஞ்சல், கௌரி, நத்தை, நிமிளை, வெடியுப்பு, கல்நார் முதலிய்ன பகைச் சரக்குகளாகும்.
சூதம், நாகச் செம்பு, பூநாகம், மயூரச் செம்பு, வெள்ளி, வெண்வங்கம் முதலியன நட்புச் சரக்குகளாகும்.