வெள்ளி
(ARGENTUM)
இது இயற்கையாக பூமியில் விளைகின்ற உலோகம். பெரும்பாலும் பிற தாதுப்
பொருட்களுடன் கலந்துதான் கிடைக்கின்றது. சில சமயங்களில் கெந்தகம், ஈயம், தங்கம், தாமிரம்
முதலியவைகளுடன் கலந்தும் இருக்கும். இந்தக் கலப்புத் தாதுக்களிலிருந்து வெள்ளி
பிரித்தெடுக்கப்படுகின்றது.
வெள்ளியின் நிறம் வெண்மை
ஆனால் சிறிது சிவப்பு நிறமும் உண்டு. இது எளிதாகக் கண்ணுக்குப் புலப்படாது.
அதிக மிருதுத் தன்மையும், நைப்பும் உடையது.
ஆகையால் மிக மெல்லிய கம்பியாக இழுக்கவும், தகடாக அடிக்கவும் முடியும்.
வெள்ளி தாமிரத்தை விட
அதிக மிருதுவானது. எளிதில் உருகக் கூடியது. மின் அதிர்வைத்
தாங்குவதிலும், சூட்டை
வாங்குவதிலும் இது ஒப்பற்றது. இது உருகும்போது பிராண வாயுவை இழுத்துக் கொள்ளும்.
ஆறியவுடன் அந்த வாயுவை விட்டு விடும். இது கெந்தகத்தை அதிகமாக இழுத்துக் கொள்ளும்.
அதனால் காற்றில் இது கெடாவிட்டாலும் இலேசாகக் கருத்து விடுகிறது. வெளிக்காற்றில்
உள்ள கெந்தகச் சத்தை இழுத்துக் கொள்வதே இதற்குக் காரணமாகும்.
வெள்ளியைக் கரைப்பதற்கு வெடியுப்புத் திராவகமே மிகவும் பயன்படும். கெந்தகத்
திராவகத்தினால் வெள்ளியைப் போட்டுக் காய்ச்சினால் கரைந்துவிடும்.
வெள்ளி அதிக மிருதுவாக இருப்பதால் சீக்கிரம் தேய்ந்துவிடுகிறது. அதனால் ஏழரை
முதல் பத்து சதவீதம் தாமிரத்தைச் சேர்த்து நாணயங்கள், சிலைகள், விளக்குகள் செய்கின்றனர். சொன்ன அளவைவிட
அதிகமாக தாமிரத்தைச் சேர்த்தும் செய்வதுண்டு.
அரண்பதி, இராதம், இரசிதம், களதவுதம், சுல்லு, சுக்கிரன் துய்யான், தாரம், வெண்தாது, வெண்பொன்,
மதுரைப் பொது என பல
பெயர்கள் இதற்குண்டு.
வெள்ளிய உண்ணுகின்ற கலமாக உபயோகித்து வந்தால் மனக்களிப்பு உண்டாகும்.
சிலேத்துமக் கோபம், பித்தக் கோபம்
முதலியவை நீங்கும். வெள்ளிக் குவளையில்
மதுபானத்தை குடித்தால் மிக. விரைவில் மயக்கம் உண்டாகும்.
அதிக புளிப்பும், குறைந்த
துவர்ப்பும், இனிப்புச்
சுவையும், சீத வீரியமும்
கொண்டது. இது சிறு குடலுக்கு ஒவ்வாது.
" பாய்க்கூட்டங் காட்டாப் யழையசுரந் தாருவிடம்
வாய்க்கூட்டச் செய்மேக.
வாதமுத--னோய்க்கூட்ட
மண்டாது காணிகொளு மத்திமே
கக்கசிவும்
வெண்டாது காணிமெய்யை
மேல்."
பைத்தியம், மனக்கலக்கம்,
வாய்நாற்றம், வாயிலிருந்து கெட்ட நீர் வடிதல், இருமல், மார்பு துடித்தல் முதலிய நோய்களைத் தீர்க்கும்.
இரைப்பை, ஈரல் முதலியவைகளை
பலப்படுத்தும். உடலில் உள்ள தீய நீர்களை விரட்டும். இதனை மேற்பூச்சாகப் பூசுவதால்
உடம்பின் மேலுள்ள வீக்கம் குணமாகும்.
இதைக் கண்பொடியாச் செய்து வெள்ளிச் சலாகையால் கண்ணிலிட்டு வர மெல்லிய கண்
பூக்கள் தீரும். கண் பார்வையைப் பலப்படுத்தும். உடலுக்குப் புத்துணர்வு கொடுத்து
அறிவிற்கு வலிமையைத் தரும்.
வெள்ளியைக் காய்ச்சினால் சிவப்பு, மஞ்சள் அல்லது கருப்பாகத் தோன்றுவதும், வரண்டு வெடித்து கனமில்லாமல் இருப்பதும்
பயனளிக்காது.
அயம், நாகம் இவற்றின்
நட்பு பகைச் சரக்குகளே இவற்றிற்கும்.