பித்தளை
(BRASS)
செம்பு அறுபத்தி ஆறு பங்கும், துத்தநாகம் முப்பத்தி நான்கு பங்கும் கலந்து செய்யப்படும் உலோகமாகும்.
சிலர் இதன் அளவைக் கூட்டியும் குறைத்தும் செய்கின்றனர். இக்கலப்பில் முக்கியமானது செம்பு ஆகையால் செம்பை தனியாக பிரிக்க முடியும்.
தாதுவிருத்தி, சீதளவிருத்தி உண்டாக்குகின்ற பித்தளை தாபசுரம், வாதம், பித்தகுன்மத்தைப் போக்கும்.
ராஜரீதி, காதுகண்டி என இரண்டு வகைப் பித்தளை உள்ளதாக சில நூல்களில் கூறப்பட்டுள்ளது.
இரதி, ஆரகூலம், மாயாபுரி, சீருணம் என்ற பெயர்களும் இதற்குண்டு.
இது மருத்துவத்தை விட இரசவாதத்திற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பிறப்பே ஒரு இரசவாதமாகும்.