உப்பை உலோகமாக்க முடியுமா?
* உலோகத்தை உப்பாக மாற்றம் செய்ய முடியும் ஆனால் உப்பை ஏன் உலோகம் ஆக்க முடியாது? இப்படி நாம் அனைவருமே கேள்விகளை மட்டுமே கேட்கிறோம்.
* தமிழ்நாட்டு சித்தர் உப்பை உலோகமாக்கினர் என்பதை சித்தர் புத்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால் தற்போதுள்ள வேறு எந்த இரசவாதியும் உப்பை உலோகமாக மாற்றும் முறையை அறிந்திருந்தால் எனக்கும் அவர்களை பற்றி கூறுங்கள் நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
* இன்னும் சிலர் சித்தர்கள் செய்த இரசவாதமே பொய் என்றும் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
* நானும் உப்பை உலோகமாக மாற்ற முடியுமா? என முயற்சித்த என் சொந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
* துரிசு, மயில்துத்தம் என அதிகம் தமிழில் அழைக்கப்படும். இந்த காப்பர் சல்பேட் உப்புக்கு இன்னும் பல தமிழ் பெயர் உண்டு. இதை ஆங்கிலத்தில் காப்பர் சல்பேட் எனவும், குப்ரிக் சல்பேட் என்றும் சொல்லப்படும். காப்பர் சல்பேட்டில் காப்பர் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்தது ஆனால் அதிலிருக்கும் செம்பை எப்படி செம்பு உலோகமாக மாற்றுவது? என நான் முயற்ச்சி செய்து பார்த்தேன் ஒரு கிலோ காப்பர் சல்பேட்டில் இருந்து சுமார் இருநூறு கிராம் காப்பர் உலோகமாக மாற்றி உருவாக்க முடிகிறது.