ஒரு உலோகத்தை வேறு உலோகமாக மாற்ற முடியும்
இரும்பு, ஈயம், நாகம் போன்ற மட்டமான உலோகத்தை செம்பாக மாற்ற முடியுமா?
இரும்பு, ஈயம், நாகம் போன்ற உலோகத்தை செம்பாக மாற்ற என்னால் முடியும் என்று இதுவரை தற்காலத்தில் உள்ள எந்த இரசவாதியும் சொல்லியதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு தரப்பினர் இரசவாதம் உண்மை எனற கருத்தை இரசவாத நூல்களை படித்துவிட்டு மட்டுமே இரசவாதம் உண்மை என கருத்துரைக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். சரி இவர்களை விடுங்கள் இவர்கள் சித்தர்களின் மீதுள்ள நம்பிக்கை இவர்களை இப்படி கூற வைத்திருக்கும் என நம்புகிறேன். ஆனால் சிலரோ இரசவாதம் என்பதே பொய் என்கின்றனர் இப்படி கூறுபவர்கள் எதை அடிப்படையாக எந்த செயல் முறை அனுபவத்தால் கூறுகின்றனர் என்பது புரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் உண்மை இரசவாதம் பொய் என்பவர்கள் இரசவாதத்தில் வெற்றி பெறாதவராக இருக்கக்கூடும் அல்லது அவர் வெறும் இரசவாத நூல்களை படித்துவிட்டு மட்டும் அனுபவமின்றி கருத்து கூறுபவராக மட்டுமே இருக்க முடியும். இரசவாதம் உண்மைதான் என்னால் ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்ற முடியும் என்று இக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இரசவாதிகள் யாரும் கூறவில்லை. அதனால்தான் இரசவாதமே பொய் என்ற கருத்தை உண்மை என்று பலரும் நம்புகின்றனர்.
நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அரிய கலையான இரசவாத கலையை பொய்யென்று எளிதாகவும் ஏளனமாகவும் தழிழ் மொழியிலேயே சிலர் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள் அவர்களும் தமிழர் என்பதையும் மறந்து அவர்கள் தெரிவித்த கருத்துக்களை படித்து வேதனை அடைந்தேன். அதனால்தான் இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் மேலே கூறிய கருத்துக்கள் யாரையும் புண்படுத்த அல்ல. ஏனென்றால் இங்கு யாருடனும் போட்டி போட்டு விவாதம் செய்ய நேரமில்லை இரசவாத தேடலுக்கே எனக்கு நேரம் குறைவாகத்தான் கிடைக்கிறது. இருப்பினும் தமிழக இரசவாத முன்னோர்களாகிய சித்தர்கள் கூறிய இரசவாதம் கட்டுக்கதையல்ல உண்மைதான் என்பதை தமிழர்கள் முதலில் தெரிந்து கொள்ளவே தமிழர்களாகிய உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
இரும்பு, நாகம், ஈயம் போன்ற மட்டமான உலோகத்தை என்னால் செம்பு உலோகமாக மாற்ற முடியும். இதில் வெற்றி பெற்றுவிட்டேன்.
இன்று உங்களோடு நான் பகிர விரும்பும் கருத்து ஒரு உலோகத்தின் அணுவை இரசவாதத்தால் மாற்றி இன்னொரு உலோகமாக மாற்ற முடியும் என்பதே. நம் தமிழக இரசவாத முன்னோர்கள் விட்டுச் சென்ற நூல்களில் உள்ள குறிப்புகள் பொய்யல்ல என்பதற்காக நான் என் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இரசவாதத்தில் நான் வெற்றிபெற அதாவது மட்டமான உலோகமான ஈயம், நாகம், இரும்பு போன்ற உலோகத்தை செம்பாக மாற்றும் முறையை அறிய நான் ஏறத்தாழ இருபது ஆண்டுகளை இரசவாதத்தில் கழித்துள்ளேன். பொறுமையோடும், விடமுயற்சியோடும் ஈடுபட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதை என்னைப் போன்ற இரசவாத முயற்ச்சியில் ஈடுபடும் நண்பர்களுக்கு புரிந்தால் சரி. ஆனால் இன்றைய இரசவாதிகள் அடிப்படை பாடங்களை கற்று பின் இரசவாதத்தில் ஈடுபடுவது வெற்றியைத்தரும்.
இந்நிலையில் இந்த மட்டமான உலோகத்தை தங்கமாக மாற்ற முடியுமா? தெரியவில்லை. ஆனால் மட்டமான உலோகத்தை செம்பாக மாற்ற முடியும்போது ஏன் தங்கமாக மாற்ற முடியாது என்று எனக்குள் எழுந்த கேள்வியோடும், நம்பிக்கையோடு என் முயற்சிகளை தொடர்கிறேன் வெற்றி பெற்றால் அதை உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.