வெள்ளை தாமிரம்
(WHITE METAL)
ஜெர்மன் வெள்ளி, சீமைச் செம்பு, வெள்ளைப் பித்தளை என்ற பெயரும் இதற்குண்டு.
வெள்ளியைப் போன்று இருப்பதாலும், இதன் விலை குறைவாக இருப்பதாலும் இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது மருத்துவத்திற்கு பயன்படுவதில்லை.
வெள்ளைப் பித்தளை பார்வைக்கு வெள்ளியைப்போல இருக்கும். ஆனால் வெள்ளியின் குணம் இதற்கில்லை. வெள்ளி எளிதில் உருகும், இதை எளிதில் உருக்க இயலாது. வெள்ளியை உருக்கும்போது திரை உண்டாகும். வெள்ளியின் இயல்பு மிருது இதன் இயல்போ கடினம்.
தாமிரம் இருபத்தைந்து பங்கு, நிக்கல் பன்னிரண்டு பங்கு, நாகம் பன்னிரண்டு பங்கு ஆகிய மூன்றையும் சேர்த்து உருக்கிக் கொள்வதே வெள்ளைச் செம்பு அல்லது வெள்ளைப் பித்தளை என சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தாமிரம் இருபத்தைந்து பங்கு, நிக்கல் ஐந்து பங்கு, நாகம் பத்து பங்கு சேர்த்து செய்யப்படுவதாகவும் உள்ளது.
நல்ல வெள்ளியின் அளவில் மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பங்கு சேர்த்து வேதித்து நகைகளை செய்ய பயன்படுத்த முடியும்.