வெண்கலம்
(BRONZE)
தாமிரமும், கருவங்கமும் சேர்ந்த கூட்டு உலோகம் வெண்கலமாகிறது.
செம்பு - 91பங்கும், துத்தம் - 6பங்கும், தகரம் - 2பங்கும், தற்சமயம் ஈயம் - 1பங்கும் சேர்த்து வெண்கலம் உருவாக்கப்படுகிறது.
தாரம், உறை, கஞ்சம் என்ற பெயர்களும் இதற்குண்டு. துவர்ப்புச் சுவையும், வெப்ப வீரியமும் உள்ள இது உடலைத் தேற்றும், உடலை உரமாக்கும்.
மேகநோய், கண்நோய், வெகு மூத்திரம், இரத்த பித்தம், ஈளை இளைப்பு,
மந்தம், வாதவலி, சூலை, பெருவயிறு முதலியன நீங்கும். பித்தமும் தாதுவும் அதிகப்படுத்தும்.