We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!

AT 8

I can't teach anyone anything, but I'll post some of what I've learned here. < > என்னால் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, ஆனால் நான் கற்றுக்கொண்ட சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

Friday, March 9, 2018

தங்கம் (AURUM)

தங்கம் (AURUM)










                   செயலிலும் மதிப்பிலும் உயர்ந்தது தங்கம். உலோகங்களின் மன்னன் என்று பெருமையுடன் சொல்லப்டுகிறது. இயற்கையாக கிடைப்பது குறைவாக இருப்பதாலும் பல்வேறு சாயன்கள் இருப்பதாலும் இதன் விலை மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது.

             காய்ச்சினால்  சிவக்கும்,  வெட்டினால் வெளுக்கும். உரைத்தால் குங்குமப் பூ நிறமடையும், பாரமுள்ளதும் மழ மழப்பு, மெது தன்மை, மினுமினுப்பு உள்ளதும் தளமாகப் பிரியாமல் உள்ள தங்கமே சிறந்தது.

                    வெளுத்து வரண்டு, நிறம் குன்றி அழுக்குடனும், அடித்தால் தகடாகப் பிரிந்தாலும், உரைத்தாலும் காய்ச்சினாலும் வெளுத்துப் போகின்றதுமான தங்கம் நல்லதல்ல.

        ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூந்தம் என நான்கு வகைகள் தங்த்தில் உள்ளதாக கூறுகின்றனர். மற்ற எல்லா வகை பற்ப மருந்துகளும் வெள்ளை ண்ணத்திலும், செந்தூரங்கள் சிவப்பு வண்ணத்திலுமே இருக்கும், ஆனால் தங்கம் மட்டும் அதே பொன் வண்ணத்திலேயே இருக்கும்.

          பொன் சேகரிப்பவர், பொன் கலந்த மண்ணை பரந்த ஓடுகளில் இட்டு நீருடன் கலந்து, சுழற்றிக் சுழற்றிக் கொட்டுவர். பொன் கனமான பொருள் ஆகையால் மண்ணும் மணலும் நீருடன் கலந்து போகும் பொன் அடியில் நின்றுவிடும். பொன் பொடியையும் மற்ற நுண்ணிய பொடியையும் இப்படியாக பிரித்தெடுப்பார்கள். அதிலிருந்தும் அதிலிருந்தும் பொன்னைப் பிரித்தெடுக்க சிறந்த முறையாக கையாளப் பட்டதே புடமிடுதலாகும்.

     பொற்கலவையை உருக்கி நீட்டித்  தகடாக்கி குறிப்பிட்ட அளவு துண்டுகளாக தகடை புளி நீரால் களுவுவார்கள், பிறகு உப்பும், இரும்பும் கெந்தகமும் கலந்த செங்கற் பொடியில் இட்டு புரட்டுவார்கள். இரண்டு ஓட்டுச் சில்லுகளிடையில் வைத்துக் கீழே காற்றுப் புகும் தொளையுடைய அகன்ற சட்டி அல்லது ஓட்டில் வரட்டியின் அனலிடையே பல மணி நேரம் வைப்பார்கள். இப்படி நாற்பத்தியொருமுறை புடமிட்டால் பொன் கலவை மாசு நீங்கி பத்தரை மாற்று பொன் ஆகுமென்பர்.

                 இக்காலத்தில் மின் சக்தியைக் கொண்டு பெரும்பாலான வேலைகளை எளிதாக செய்கின்றனர். சுரங்கங்களில் உடைத்தெடுத்த பாறைத் துண்டுகளை ஆலையில் உள்ள அரவை இயந்திரத்தில் பொடி ஆக்குகின்றனர். வேகமாக ஓடுகின்ற நீர்க் குழாய்களில் அப்பொடி இழுத்துச் செல்லப்டும்.

         பொன் பொடி கலந்த நீரில் ஓடும் வழியில் பாதரசம் பரப்பிய பலகை இருக்கும் மணலிலுள்ள பொன் பொடிகளின் ஒரு பகுதி பாதரசத்துடன் சேர்கிறது. இந்தக் கலவையை உஷ்ணப்படுத்தி பாதரசத்தை தனியாகவும் தங்கத்தை தனியாகவும் சேகரிக்கின்றனர்.

      குழாய் வழியாக  செல்லும் பொன் பொடிகள் மயிர்க்கால் அளவு துளையுள்ள மெல்லிய சல்லடைகளில் அடிக்கப்படுகிறது. அவைகளை உலர்த்தி பொடிகளை உருக்குவர்.

            இந்த இரண்டு முறைகளிலும் தப்பிச் செல்லும் நுண்ணிய பொடிகளை தண்ணீரில் கரையக்கூடியதும், தங்கத்துடன் கலக்கக்கூடியதாகவும் உள்ள 'ஸயனைடு' என்கின்ற பொருளின் உதவியால் பிரித்தெடுக்கின்றனர். துத்தத்தின் மீது பொடியாய்ப் படிந்துவிடும்.

              இந்த மாதிரி மூன்று முறைகளில்  தங்கம் பிரித்தெடுக்கப் படுகிறது. இது ஓரளவு தரம் குறைவாகவே இருக்கும். தனித்தோ மற்ற பொருட்களுடன் கலந்தோ உருக்கப்படும் பொழுது தரத்தில் மாற்று உயரும்.

        தங்கத்தின் ஒப்ப எடை எண் (Specific Gravity) 19.32 ஆகும். 35.25 செ.மீ நீள அகல உயரமுடைய பொற்கட்டி ஒரு டன் எடை உள்ளதாக இருக்கும்.

     தங்கத்தின் தனிச்சிறப்பும் பெருமையும் கூடுவதற்கு முக்கியமானது, மினுமினுப்பும் எளிதில் பளபளப்பு கெடாத தன்மையும் ஆகும்.

    பொன்னின் இயற்கை நிறம் மங்கிய  பசுமையான மஞ்சள் நிறம். காற்றிலுள்ள உயிர்க் காற்றுடன் கலந்து களிம்பு பிடிக்காது.

             தங்கத்தில் வெள்ளி கலந்தால் பசுமையாகியும், வெளிறியும் தோன்றும். செம்பு கலந்தால் பழுப்பும் செந்நிறமும் அதிகமாகும். சுரங்கங்களில் பொன் உருகி ஓடும்போது பச்சைப் பசேலென ஒளி வீசுவது அதில் கலந்த வெள்ளி, துத்தம் முதலியவற்றாலேதான்.

          எல்லா  திடப்  பொருட்களும்  அமிலங்களில்  கரையும் தன்மை  உடையவை ஆனால் தங்கம் மட்டும் அமிலத்தில் கரையாது.

          தங்கத்துடன் எளிதில் சேரும் பொருட்கள் அரச நீரகம் (Agua Regia), பாதரசம், ஸயனைடு ஆகிய மூன்றாகும். உயர் வெப்ப நிலையுடைய இரு வகை அமிலங்களில் (Selleric Acid, Telluric Acid) கரையும் என்று சொல்லப்படுகிறது. கந்தக அமிலமும், நைட்ரிக் அமிலமும் கலந்த கலப்பு திராவகத்தில் போட்டு உஷ்ணப்படுத்தினால் கரையும்.

         ஒரு கிராம்  தங்கத்தை  கிட்டத்தட்ட  இரண்டரை  கிலோ  மீட்டர் தொலைவு நீளமுள்ள கம்பியாக நீட்ட முடியும் என்கின்றனர்.

        தங்கத்தின் தரத்தையும் மதிப்பையும் நம் நாட்டில் 'மாற்று' என்று சொல்வர். நல்ல தரமான தங்கம் 'பத்தரை மாற்றுப் பொன்' எனப்படும். கலப்புத் தங்கம் மாற்றுக் குறைந்தது எனப்படும். உரை கல்லில் வைத்து உரசிப் பார்த்து இதன் தரத்தை அறிகின்றனர்.

         தற்போது வேறு முறையிலும் துல்லியமாக அறிகின்றனர். 24 Carat சுத்தமான தங்கம் இது மிக எளிதாக வளையவும் நசுங்கவும் கூடியது. அதனால் தங்க நகைகள் போன்றவற்றை செய்வதற்கு சற்று மாற்று குறைந்த 22 Carat தங்கம் பயன்படுத்துகின்றனர்.

" அடற்றா வரவிடங்க ளங்கவொளி மங்கல் 

   கடந்தாமுந் தோடகயங் காச -- முடற்பஞ் 

   சேகையிருந் தாதுநட்டந் திட்டிநோ யீளையிவை 

   யீகைபிருந் தாலேகு மென். "

          வெப்ப  வீரியமும்  இனிப்புச்  சுவையும் இருந்தாலும் மற்ற இனிப்புச் சுவை பொருட்கள் போல் கபத்தை கூட்டாது.

          தாவர விஷங்கள், உடலில் ஒளிக் குறைவு, சன்னி, இளைப்பு நோய், காசம், உடல் வெப்பம், முதிர்ந்த கபம், தாது நட்டம், கண் நோய், கோழைக்கட்டு போக்கும்.

         மாசை மீதகம், பீதம் மாடை, மாடு வேங்கை, ஆசை, சுவணம், காரம், அருத்தம், காஞ்சனம், காணம், தேசிகம், கனகம், கைத்து, செந்தாது, பொலம், அத்தம், சாமி, வித்தம், தனம், உடல், பண்டம், இரணியம், நிதி, வெறுக்கை, ஈகை, கல்யாணம், ஓமம், சந்திரம், சாம்பூந்தம், பூரி, ஈழம், திரவியம், சாதரூபம், செங்கோல், நிதானம், மாழை, அரி, தடனியும், தமனியம், ஆடகம் என்ற பல பெயர்களால் இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.

         இரச காரசாரங்கள் நட்புச் சரக்குகள் ஆகும். முட்டை ஓடு, அப்பிரகம், கெந்தகம், காந்தம், குதிரைப் பல் பாஷாணம், கோமுகப் பாஷாணம், கௌரி பாஷாணம், சவுட்டுப்பு, மிருதார் சிங்கி, மனோசிலை, சூதம், தாளகம், நாகம், நிமிளை, பொன்னம்பர், வீரம், வெடியுப்பு, வெள்ளைப் பாஷாணம், வங்கம், துருசு, லிங்கம் முதலியன பகைச் சரக்குகளாம். 


Share:

AT 9

Multiplex AT 1

AT 2

''I cannot teach anybody anything, I can only make them think.''

AT 6

Follow by Email

Subscribe To Get All The Latest Updates!

email updates

Social Meadia

Blog Archive

New Posts

AT 7