அணு
(ATOM)
மூலக்கூறுகளில் உள்ள கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய துகள்கள் அணுக்கள் எனப்படும் ஓரு தனிமத்தில் கோடிக்கணக்கான அணுக்கள் காணப்படும். ஒரு அணுவை நுண்ணிய தொலை நோக்கி மூலமே பார்க்க முடியும்.
ஒரு அணுவில் நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான்கள் அணுவில் உள்ளன.
உடகரு(Nucleus)
ஓர் அணுவின மையப் பகுதியை (Nucleus) உட்கரு என்கிறோம். அணுவின் உட்கருவில் நியூட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள் காணப்படுகின்றன.
நியூட்ரான்
நியூட்ரான்கள் அணுவின் மையப்பகுதியான உட்கருவில் காணப்படுகின்றன. இவை (நியூட்ரல் சார்ஜ்) அதாவது மின்தன்மை இருக்காது.
புரோட்டான்
புரோட்டான்கள் அணுவின் மையப்பகுதியான உட்கருவில் காணப்படுகின்றன புரோட்டான்கள் நேர் மின்னோட்டம் (positive Charge) கொண்டவை. ஒரு அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அத்தனிமத்தின் அணு எண்ணைப் பொருத்தது.
எலக்ட்ரான்
எலக்ட்ரான்கள் அணுவின் மையப்பகுதியான உட்கருவின் வெளி வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன எலக்ட்ரான்கள் எதிர் மின்னோட்டம்(Negative Charge)உள்ளது.ஒரு அணுவில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் அத்தனிமத்தின் அணு எண்ணும் சமம்.