தரா
எட்டுப் பங்கு தாமிரமும் ஐந்து பங்கு காரீயமும் கலந்து செய்யப்படும் உலோகம் இது. 'மதுகம்' என்ற பெயரும் இதற்குண்டு.
கெட்டியான -- கட்டிப்போன -- உலோகம் வெட்டைத் தரா எனப்படும்.
" சூலையோடு மேகத்தைத் தோன்றாம லோட்டிவிடு
மேலைவரு காலை விலக்குங்கா--ணால
வராமே வியவல்கு லாரணங்கே வெட்டைத்
தராவெனும் லோகமது தான். "
இது சூலை, மேகம், கபவாதம், பெருவயிறு, மண்ணீரல் கோளாறுகள், குன்மம் முதலிய நோய்களைப் போக்குகிறது.