இயற்கையாக பூமியில் கிடைக்கும், ஆனாலும் மற்ற பொருட்களுடன் கலந்தே கிடைக்கின்றது. மற்ற பொருட்களை நீக்கி நாகத்தை மட்டும் பிரித்த பிறகு இது வெள்ளையும் நீலமுமம் கலந்த நிறமாகவும், பளபளப்பாகவும், கட்டியாகவும் இருக்கும். இதைக் கம்பியாக நீட்டவும், தகடுகளாக அடிக்கவும் முடியும். இது திராவகங்களில் கரையும். காற்றுப் பட்டால் நாளடைவில் இதன் மேல் உப்புப் பூத்துவிடும்.
நாகத்தில் இரு வகைகள் உண்டு :
1.பெரு கண் நாகம்.
2.சிறு கண் நாகம்.
அணுக்கள் அடங்கிய சிறு கண் நாகத்துடன் செம்பு சேர்த்து உருக்கும் போது நமக்கு பித்தளை என்ற உலோகம் கிடைக்கும்.
இதை உருக்கும்போது பாம்பு போல சீறும். அதனால் நாகம் என்று பெயரிட்டிருக்கலாம், துத்தநாகம் என்ற பெயரும் உண்டு. சீறல், பொருமல், பொங்கல், இரைச்சல், ஐம்புகை, சோரம், வாசுகி, வெண்நாகம், தாம்பிரத்தின் பேதை, வாதத்திற்கு உயிர் என்கிற பெயர்களாலும் நூல்களில் குறிப்பிடப்படுகின்றது.
" மேகங் கிளர்பேதி வெட்டையழ லைத்தணிக்கும்
வேகங்கி ராணி விலக்குங்காண்--போகாப்
பரியமுலைப் புண்ணைப் பயித்தியத்தைப் போக்கு
மரியதுத்தி நாக மது."
மேகம், பேதி, வெள்ளை, உட்சூடு, முளைப்புண், பித்தம் முதலிய நோய்களைப் போக்கும். இரத்தப் பெருக்கை தன்மையும், உடலை தேற்றும் தன்மையும் இதற்கு உண்டு.
அண்டம், அபினி, அன்னபேதி, கல்லுப்பு, கிளிஞ்சல், சிங்கி, தங்கம், தரா, நண்டு ஓடு, மிளகு, வளையலுப்பு, வீரம், வெடியுப்பு, வெண்காரம், வெள்ளி, வெள்ளைப் பாஷாணம் முதலியன நாகத்தின் பகைச்சரக்குகள் ஆகும்.
அப்பிரகம், இரும்பு, கெந்தி, காந்தம், காரீயம், கௌரிப் பாஷாணம், நவச்சாரம், சிலாசத்து, சூதம், செம்பு, மயூரச் செம்பு முதலியன நட்புச் சரக்குகளாகும்.