மனோசிலை
(ARSENICUM RUBRUM)
இது இயற்கையாக கிடைப்பது, செயற்கையாக செய்யப்படுவது என்று வகையுண்டு.
சிவந்த அரிதாரம், மடல் அரிதாரம், குதிரைப்பல் பாஷாணம் ஆகியவையும் மனோசிலையைக் குறிக்கும் என சிலரும் மனோசிலைக்குப் பதிலாக பயன்படுத்தக் கூடியது என சிலரும் கூறுகின்றனர்.
" குட்டங்கொடியரணங் கூறுந் திமிர்படையும்
வட்ட மிடுங்கிரந்தி வன்மையெலாம்---விட்டுப்போம்
காய்ச்சல் நடுக்கலஜ கன்னியிரைப் புச்சிலந்தி
பேச்சறும னோசிலையைப் பேண்."
வெப்பத்தைப் போக்கி, உடலைத்தேற்றி உரமாக்கக் கூடிய குணமுள்ளது.
தோல்குட்டம், குளிர்காய்ச்சல், குழந்தைகளுக்கு உண்டாகும் ஒருவகை கொப்புளங்கள், இரைப்பு, சிலந்தி நஞ்சு முதலியன நீங்கும்.
சிலை, வில், குநடி, நான்முகன் தேவி, சரசோதி, வாணி, வெள்ளச்சி, தாமரை வாசிணி என்ற பெயர்கள் இதற்குண்டு.