We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!
I can't teach anyone anything, but I'll post some of what I've learned here. < > என்னால் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, ஆனால் நான் கற்றுக்கொண்ட சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன்.
Showing posts with label Alchemy Tamil. Show all posts
Showing posts with label Alchemy Tamil. Show all posts

Sunday, November 10, 2024

ஐம்பொன் இரகசியம்


ஐம்பொன் இரகசியம்


  இரும்பு, ஈயம், செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற ஐந்து உலோகங்கள் கலந்த கலவையே ஐம்பொன் அல்லது பஞ்சலோகம் என்றழைக்கிறோம்.

பொதுவாக நம் நாட்டிலுள்ள மண்ணில் உலோக சத்துகள் குறைவாக கிடைப்பதால் பஞ்சலோக சிலைகள் செய்து அவற்றிக்கு அபிஷேகம் செய்து அவற்றின் பிரசாதத்தை உண்டு உடலுக்கு உலோக சக்தியை கொடுப்பார்கள்.

வியாழ கிரகத்தின் ஆற்றலை பெற தங்கத்தையும், சனி கிரகத்தின் ஆற்றலை பெற இரும்பையும், சுக்கிர (வெள்ளி)கிரகத்தின் ஆற்றலை பெற வெள்ளியையும், சூரிய கிரகத்தின் ஆற்றலை பெற செம்பையும், கேது கிரக்கத்தின் ஆற்றலை பெற ஈயத்தையும் மானிடர்கள் தங்கள் அணிகலன்களாக அணிந்து கொள்கின்றனர்.

இந்த உலோகங்களால் ஆன அணிகலனை மோதிரமாகவோ,  காப்பாகவோ,  தண்டையாகவோ அணிந்தால் அந்தந்த கிரகத்தின் ஆற்றலை பெறலாம். ஐந்து உலோகங்களின் இரகசியம் மற்றும்

இந்த ஐந்து உலோகங்களின் மருத்துவ தன்மை நம் முன்னோர் அறிந்திருந்தனர் அவற்றின் விளக்கத்தை இங்கு காண்போம். 


 இரும்பு

இந்த உலோகம் பெரும்பாலும் எதிர்மறை சக்தி கொண்டது தான். அக்காலத்தில் எப்படி நல்ல காரியத்திற்கு பயன்படுத்தினார்கள் என்றால் வெளியே செல்லும் ஒரு பெண்ணை எதிர்மறை சக்திகள் நெருங்காமல் இருக்க இரும்பு துண்டுகளை எடுத்து செல்ல சொல்லுவார்கள். ஆனால் இது கால போக்கில் வழக்கொழிந்து விட்டது சில இடங்களில் இப்போதும்  பெரியவர்கள் கூறுவார்கள்.


“இடி இடிக்கும்போது இரும்பை முற்றத்தில் வை” என்ற பழமொழி உள்ளது. இதன் அர்த்தம் என்னவெனில் இடி மின்னல் வரும்போது இரும்பை முற்றத்தில் வைத்தால் இரும்பில் உள்ள காந்த சக்தி அந்த மின்காந்த ஆற்றல்களை தன்பால் ஈர்த்து கொள்ளும். இந்த இரும்பை, வைத்து கொண்டால் தான் நன்மைகள் கிடைக்கும். ஆனால், சிலர் கிராமத்தில், சாதரணமான இரும்பை தான் வெளியே எடுத்து செல்கிறார்கள். ஆனால் மற்ற உலோகத்தோடு கலப்பதால் அதிக நன்மை பயக்கும்


 ஈயம்

இது உடலுக்கு மிகவும் ஆபத்தான உலோகம் என்று எல்லோராலும் சொல்லபடுகிறது. இதன் நன்மை என்னவெனில் ஐம்பொன்னில் மற்ற உலோகத்தோடு இருப்பதால் ஆபத்து இல்லை, இதன் கதிர்வீச்சு மனிதனின் ஆன்மீக சிந்தனையை தூண்டுவிதமாக அமைகிறது. மனிதனின் உயிர் சக்தியை விரயம் ஆகாமல் செய்யும் வண்ணம் இது காக்கிறது.


 செம்பு

செம்பு உலோகத்தை பற்றி கூற நிறைய உள்ளன. இருப்பினும் இதன் சிறப்பே சக்தியை விழிப்புடன் வைக்க உதவுகிறது. கவனிக்க வெப்பத்தை மேலே கொண்டு வராது. இதன் மிதமான வெப்பத் தன்மை உயிருக்கு ஆற்றலை அளிக்க கூடியது, மனித உடலை சுற்றியுள்ள காற்று மண்டலத்தை பலபடுத்தும், மூளையின் செயல் திறன் அதிகமாகும்.


 வெள்ளி

வெள்ளி உலோகத்தையும் எண்ண அலைகளை அனுப்ப பயன்படுத்தியதாகவும். மேலும் இவ்வுலோகத்தை அதிகம் பயன்படுத்தவில்லை ஏனெனில் இதன் அலைவீச்சு தங்கத்தை விட குறைவாக உள்ளது. இதற்கு மானிடர்களின் உணர்ச்சி அலைகளை கட்டுபடுத்தும் ஆற்றல் உண்டு என்பதை அறிந்திருந்தனர். 


 தங்கம்

தங்கம் என்ற உலோகத்தை அணிவதால் மனிதனின் எண்ணங்களை பிரபஞ்சத்திற்கு அனுப்பமுடியும். அதாவது அக்காலத்தில் மக்கள் தங்கம் அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று தனது துன்பங்களை கடவுளிடம் தெரிவித்து வரம் கேட்பார்கள். கடவுள் சிலைகளுக்கும் தங்க நகைகள் போடுவது இதனால்தான், இதுவும் ஒரு விஞ்ஞான முறையாக கருதினர். கடவுள் சிலைகள் பிரபஞ்சத்தின் நுழைவு வாயிலாக கருதி மனிதர்களின் எண்ணங்களை அங்கு வைக்கும் போது உடனே பிரபஞ்ச சக்தியிடம் அனுப்பப்படும் என்று கருதினர்.


இப்படி ஐம்பொன் உலோகமும் மனிதனுக்கு நன்மையளிக்கும் என்பதை தமிழர்கள் அறிந்திருந்தனர். மேலும் அதை ஆபரணமாக அணியவும் செய்தனர். இது தமிழர்களின் அனுபவ முறைகளில் ஒன்றாகவே இருந்துள்ளது. 

Share:

Thursday, December 2, 2021

On earth, metal grows like a plant

பூமியிலேயே உலோகம் ஒரு தாவரத்தை போல வளரும்

Mouse over the image:

Share:

Wednesday, April 14, 2021

தமிழ் மக்களின் அணு அறிவியல்

 

தமிழ் மக்களின் அணு அறிவியல்

(குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல்)


இந்த உலகில் உள்ள அனைத்துமே அணுக்களால் உருவானதுதான். 

கடவுள் இந்த உலகை படைத்திருந்தாலும். கடவுள் படைத்த அனைத்திலுமே  அறிவியல் வினைபுரிதல் விதிமுறைகளுக்கு உட்பட்டே உருவாக்கி இருப்பதை நான் பார்க்கிறேன்.

உயர் மற்றும் மிக உயர்ந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல் மூலம் மட்டுமே தற்போதுள்ள அறிவியலில் அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவும் செய்ய முடியும் என்கின்றர் விஞ்ஞானிகள்.

உலகத்தில் இதுவரை வாழ்ந்து மறைந்த மற்றும் தற்போது உலகில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எந்த ஒரு விஞ்ஞானியும் என்னால் குறைந்த மற்றும் மிக குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதலை செய்ய முடியும் என்று சொல்லிய ஒரு வரலாற்று ஆதாரங்களும் இல்லை. ஆனால் உலகின் மிக பழமையான மொழியான தமிழ் மொழி பேசும் மக்களின் வழி வந்த ஒரு தமிழனாக நான் சொல்கிறேன். மிகவும் குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதலை செய்ய என்னால் முடியும்.    

குறைந்த மற்றும் மிக குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல் அணு அறிவியலை பயன்படுத்தி அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவும் என்னால் செய்ய முடியும். 

அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக மட்டுமே அணு அறிவியலால் விளக்கம் சொல்கிறேன். ஆனால் என் பார்வையில் இந்த குறைந்த மற்றும் மிக குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல் அணு அறிவியல் பூமியில் இயற்கையாக நிகழ்வதால்தான். ஒரு பொருள் வேறு பொருளாக பரிணாம வளச்சியடைந்து மாற்று பொருளாக மாற்றம் பெறுகிறது.

மேலும் அணுக்கரு வினைபுரிதல்  பூமியில் இயற்கையாக நிகழ்வதால் பல இயற்கை வளங்கள் பரிணாம வளர்ச்சி பெறுகின்றன. அதுமட்டுமல்ல  நோய்களால் பாதிக்கப்படாமல் மனித உடலை பரிணாம வளர்சியடைய செய்ய மிகவும் குறைவான ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல் அறிவியல் மூலம் சாத்தியப்படுத்த முடியுமென நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன்.

கடவுளுக்கு மதம் இல்லை. உலகில் வாழும் மனிதகுலம் அனைவருக்கும் ஒரே ஒரு கடவுள் மட்டும்தான் என்பதை உணர்ந்து உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் உண்மையான கடவுளை பின்பற்றி நற்செயல் செய்வதே அழியா உடலை பெறும் வழியாகும்.  தவறான அரசியல் வாதிகளையும், தவறான மதவாதிகளையும் நம்பி  நீங்களும் தவறான வழியில்  போகாதீர்கள். விழிப்பாய் இருங்கள் அவரவர் வாழ்வின் முடிவு அவரவர் கையில்.  அதனால் சரியான பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றுங்கள்.  

உலகின் அதிநவீன சக்திவாய்ந்த ஆயுதம்கொண்டு தாக்கினாலும் இயற்கையை வெல்ல முடியாது என்பது மனிதர்களுக்கு புரியும் அப்படி புரியவில்லையென்றால் அவர்கள் மனிதர்களே இல்லை என்பேன். ஆனால் இயற்கையில் இயங்கும் அறிவியலை புரிந்து கொண்டால் இயற்கையை மனிதகுலத்திற்கு தீங்கு விளைவித்து விடாமல் தடுக்க முடியும். வல்லரசுகளின் ஆயுதங்களால் வெல்ல முடியாத இயற்கையை அறிவால் மட்டுமே வெல்ல முடியும். இயற்கையை வெல்ல முடிந்த எந்த ஒரு நபராலும் வல்லரசுகளின் ஆயுதத்தை வெல்வது கடினமல்ல என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.   

இயற்கையாக இயங்கிக் கொண்டிருக்கும் அணு அறிவியலால் இயற்கை இயங்குவதை நாம் முழுமையாக அறிந்தால் மட்டுமே இயற்கையை பாதுகாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். நாம் வாழும் பூமியை நம்மால் மறுசீரமைத்து மனிதன் வாழ ஏற்ற பூமியாக மாற்ற முடியாவிட்டால்  மனிதர்கள் வாழ ஏற்ற கிரகமாக ஒரு புதிதாக கிரகத்தை  தேடி கண்டறிந்து சீரமைத்து வாழ்வதும் சாத்தியமற்றதே.

பொதுவாக உலக அளவில் ரசவாதம் என்றாலே போலி அறிவியல் என்று சொல்கின்றனர்.  ரசவாதம் என்பது போலி அறிவியல் என்று ரசவாதத்தில் தோற்றவர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனால்  தமிழர்களின் ரசவாதத்தில் உள்ள ஒரு அறிவியல் மிகவும் குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல் அறிவியல் என்று நான் சொல்கிறேன்.  மேலும் தமிழ் ரசவாதத்தில் இன்னும் பல இயற்கை சார்ந்த அறிவியல் உள்ளதாகவே நான்  நம்புகிறேன்.      

இயற்கையாக நிகழும் அணுக்கரு வினைபுரிதல் அறிவியல் தமிழ் ரசவாதத்தில் இருக்கும் ஒரு அறிவியல் என்பதை இப்போது புரிந்து கொள்வார்கள் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். தமிழ் மொழி தவிர உலகில் உள்ள மொழிகளில் வேற்று மொழிகளில் உள்ள ரசவாதத்தில் அறிவியல் இருக்கிறதா என்பதை வேற்று மொழிகள் தெரிந்தவர்கள் சொன்னால் மட்டும்தான் தெரியும். 

நான் இன்று சொல்கிறேன் என் தாய்மொழி மிக பழமையான மொழி மட்டுமல்ல இயற்கையை பாதுகாக்கும் அறிவியலும் என் தாய் மொழியில் உள்ளது.  பூமிக்கு அடியில்  அகழாய்வு மேற்கொண்டு கிடைத்த தமிழர்களின் அறிவியல் ஆதாரங்களை மறைத்து தடுத்திருக்கலாம். ஆனால்  இனி தமிழர்களின் அறிவியலை  உலக மக்களுக்கு தெரியமல் எந்த ஒரு நபராலும் மறைக்க முடியாது.   

உலகின் நிலப்பரப்பில் வாழும் மக்களை அடிமைபடுத்தி ஆட்சி நடத்த தமிழர்கள் நினைப்பதில்லை  ஆனால் அதற்கு மாறாக உலக நிலப்பரப்பில் வாழும் மனிதகுலத்தை நோயின்றி நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாக வாழ வைக்கும் சிந்தனை உள்ளவர்கள் தமிழர்கள்.

 

14-04-2021

அமல்

Share:

Friday, July 26, 2019

தாளகம்


 தாளகம்   
(ARSENIC  TRISULPHIDE)










தாளகம் இரும்புடன் கலந்து கிடைக்கிறது. சைனா மற்றும் சுமத்ரா ஆகிய நாடுகளில் கிடைப்பதைவிட இந்தியாவில் குறைவான அளவு தாளகம்தான் கிடைக்கிறது. 

தாளகம் கனம் உடையது. நெருப்பிலிட்டால் நீல நிற புகை வரும்.

1. சிவந்த அரிதாரம்    - சிவந்த கல் போல் இருப்பது.
2. மடல் அரிதாரம்     - இரண்டு கரடு அல்லது கட்டி இருப்பது.
3. பொன் அரிதாரம்     - பொன் நிறமாக இருப்பது. 
4. திரட்டு அரிதாரம்     - அடுக்கடுக்காக இருப்பது. 

ஏறத்தாழ தாளகத்தின் எல்லா வகைகளும் ஒரே குணத்தை உடையது.  பாசாணமும் கந்தகமும் கலந்திருக்கும் சதவீதத்தால் தாளகத்தில் இந்தனை வகைகள்.  

சிவந்த அரிதாரம், மடல் அரிதாரம், இரண்டும் மனோசிலை என்றும் கூறுகின்றனர். 

கோழை அகற்றுதல், சுரம் அகற்றுதல், வாந்தி உண்டாக்குதல் முதலிய செய்கைகளை கொண்டது தாளகம். 


' தாளகத்தின் பேருரைக்கத் தாலுகவு ணோய்குட்ட 
 நீளக் குளிர்காய்ச்ச னீர்க்கபங்க - ணாளகங்கொள் 
 துட்டப் பறங்கிப்புண் சூழழுகண் மண்டைநோய் 
 கிட்டப் படுமோ கிளத்து. ' 

' மந்தாரத் தாலே வளருஞ் சுவாசநோ 
 யுந்திவரு தீச்சுரநோ யோடுங்காண் - முந்து 
 தொனிக்கயஞ்செய் யான்கடியுந் தோற்குட்டு மேகுந் 
 தனிப்பொன் னரிதாரத் தால். ' 

' காச முடனே கயநோய் கபவாதம் 
 பேசரிய குன்மமெட்டும் பேருங்காண் - மாசகன்ற 
 கீற்று மதிநுதலே கேளாயுள் வேதமது 
 சாற்று மரிதாரத் தால். ' 

' ஈளை யுடனே யிருமல் குடி விலகுங் 
 கோழை மலமகலுங் கொம்பனையாய் - நாளு 
 மடலுறுக யங்கரப்பா னாறாப்புண் ணும்போ 
 மடலரிதா ரத்தை மதி. ' 

' மடலரிதா ரத்தில் வருங்கரடி ரண்டு 
 முடல்விடங்க ளைக்களையு முண்மை - கடல்சூழும் 
 வையகத்தி லிச்சரக்கை வன்றீயில் வைத்தெடுக்க 
 ஐயமிலை யென்றே யறி. ' 

' சிவந்தவரி தாரமது செஞ்சிலைபோற் காட்டு 
 முவந்ததனை யுண்முறையோ டுண்டா - லிவர்ந்தாழ் 
 சுரங்குளிர்மா வாதமுடற் சூலைநமை குட்ட 
 மிரங்குமென நாளு மிசை. ' 



ஈழை, இருமல், கோழை, இளைப்பு, குட்டம், குளிர் சுரம், பறங்கிப்புண், உடல் குத்தல், நமைச்சல், கபால நோய்கள், நாக்கு நோய்கள் தீர்க்கும். 

ஆயுர்வேத வைத்திய நூல்களில் பத்திர தாளகம், பிண்ட தாளகம், என இரண்டாக சொல்லப்படுகிறது. 

பத்திர தாளகம் காய்ச்சலை போக்கவும், உடலை தேற்றவும் பயன்படுகிறது. 

பிண்ட தாளகம் வர்ண பொருளாகவும், தாள்களை உருவப்படுத்துவதற்கும், சிதல் பூச்சிகள் பாழ்படுத்தாமல் பாதுகாக்கவும் பயன்படுகிறது. 

பீதகி, ஆலம்பி, பிஞ்சனம், பழுப்பு, கோதந்தம், மாலம், அரிதாரம், கால்புத்தி, பொன் வர்ணி, மஞ்சள் வர்ணி, மால் தேவி, அரிதளம், போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. 

இரசவாதத்தில் தாளகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரிதாரத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் வங்கம் செம்பில் கலந்தால் நிறம் கொடுக்கும் என்றும் சொல்கின்றனர். 







Share:

Friday, February 1, 2019

பாஷாண உபரசங்களும் அதன் வேதிவினைகளும்

பாஷாண உபரசங்களும் அதன் வேதிவினைகளும்


1.துரிசு                                        _   இரசத்தைக் கொல்லும்.

2.பொன் நிமிளை                   _   தங்கத்தை சுண்ணமாக்கும்.

3.கஞ்ச நிமிளை                     _   வெண்கலத்தை சுண்ணமாக்கும்.

4.உலோக நிமிளை              _   இரும்பை குருவாக்கும்.

5.காக நிமிளை                      _   தராவைச் சுண்ணமாக்கும்.

6.முத்துச் சிப்பி                     _   நவச்சாரத்தைக் கட்டும்.

7.அஞ்சனக்கல்                     _   சரக்கெல்லாம் ஈயமாக்கும்.

8.இராசவர்த்தக்கல்            _   நவலோகத்தை வேதையாக்கும்.

9.நண்டு                                   _   சூதத்தைக் கட்டும்.

10.கிளிஞ்சல்                         _   வங்கம் பாஷாணம் முதலியவைகளின்                     
                                                         தோசத்தைப் போக்கும்.

11.யானைக் கொம்பு           _   வெடியுப்புக் கம்பியைக் கட்டும்.

12.பன்றிக் கொம்பு               _   வீரம் குருவாகும்.

13.மாட்டுக் கொம்பு             _   பாஷாணம் செந்தூரமாகும்.

14.முத்து                                  _   இரசத்தை மணியாக்கும்.

15.பவளம்                                _   இரசத்தை ஏமமாக்கும்.

16.சூடாலைக்கல்                 _   நவலோகங்கள் செந்தூரமாகும்.

17.மஞ்சட்கல்                        _   கெந்தகம் செம்பாகும்.

18.மாக்கல்                              _   தாளகம் ஈயமாகும்.

19.சிலாவங்கம்                     _   பாஷாணம் பற்பமாகும்.

20.அன்னபேதி                       _   இலிங்கம் மெழுகாகும்.

21.சொர்ணபேதி                    _   நவலோகத்தையும் தண்ணீராக்கும்.

22.உவர்மண்                           _   தாது பற்பமாகும்.

23.கருமணல்                          _   தங்கத்தை குருவாக்கும்.

24.செம்மண்                            _   காரீயம் செம்பாகும்.

25.சுத்தமண்                            _   அயம் செம்பாகும்.

26.பன்றி முள்                         _   இரசம் வெண்மையாகும்.

27.எலி முள்                             _   வீரம் செம்பாகும்.

28.மீன் எலும்பு                        _   கௌரி பாஷாணம் ஈயமாகும்.

29.முள் சங்கு                           _   வெள்ளை ஈயமாகும்.

30.நாகப்பச்சை                        _   உருக்கு செம்பாகும்.

31.மரகதப் பச்சை                   _   அயம் செம்பாகும்.

32.வெள்ளை சுக்கான் கல்  _   வெள்ளீயம் வெள்ளியாகும்.

33.காகச் சிலை                        _   காந்தம் செம்பாகும்.

34.மந்தாரச் சிலை                 _   சூடன் செம்பாகும்.

35.சாலக் கிராமம்                  _   தங்கம் செம்பாகும்.

36.மாந்துளிர் கல்                   _   கெந்தகம் செம்பாகும்.

37.முட்டை                               _    வெள்ளீயத்தில் நீர்வாங்கும்.

38.கற்களி                                  _   வெள்ளீயம் செம்பாகும்.

39.செம்பு மணல்                     _   சவ்வீரம் செம்பாகும்.

40.நாக மணல்                         _   இரசம் செம்பாகும்.

41.காரீய மணல்                    _   இலிங்கம் செம்பாகும்.

42.உலோக மணல்                _   மனோசிலை செம்பாகும்.

43.கடுஞ்சுக்கான்                    _   குதிரைப் பல் பாஷாணம் செம்பாகும்.

44.நாகச்சிலை                         _   நவலோகம் செந்தூரமாகும்.

45.ஏம சிலை                            _   பாஷாணங்கள் செந்தூரமாகும்.

46.காரியச் சிலை                   _   பச்சை கற்பூரம் செம்பாகும்.

47.வெண்கலச் சிலை           _   வெடியுப்பு செம்பாகும்.

48.செம்புச் சிலை                    _   கல்லுப்பு செயமாகும்.

49.ஆட்டுக் கொம்பு                 _   உப்பெல்லாம் சுண்ணமாகும்.

Share:

Thursday, January 31, 2019

இரசவாதமும் மூலிகையும்

இரசவாதத்தில் ஈடுபடுபவர்கள் மூலிகைகளையும் அதனுடைய வேதிவினையை நன்கு அறிந்திருந்தால் அவர்கள் இரசவாதத்தில் அடுத்த படியைத் தொடர இலகுவாக இருக்கும். 



உதாரணத்திற்கு சில  மூலிகைகளின் செயல்களை கீழே காண்போம்.

1.ஓரிதழ் தாமரை          _   கெந்தியை பற்பமாக்கும்.

2.கரு ஊமத்தை             _   பாதரசத்தைக் கட்டும்.

3.குமரிச்சாறு                  _   இரும்பையும் துரும்பாக்கும்.

4.வேலிப்பருத்தி            _   எதையும் சுண்ணமாக்க உதவும்.

5.புகையிலை                 _   வெடியுப்பைச் சுண்ணமாக்கும்.

6.வெண் பூசணி             _   பாஷாண நச்சு வேக்காடு, இடு மருந்து போக்கும்.

Share:

Wednesday, January 30, 2019

உப்பு, பாஷாண வேதியியல் வினைகள்

இரசவாதிகள் தெரிந்துகொள்ள வேண்டிய உப்பு மற்றும் பாஷாணங்களின் வேதி வினைகளைப் பற்றி காண்போம்.


1.அஞ்சனக்கல்                                 -  அயத்தைப் பற்பமாக்கும்.

2.அப்பிரகம்                                        -  பாதரசத்தைக் கட்டும்.

3.அரிதாரம்                                         -  வங்கத்தை நீற்றும், கட்டும்.

4.கற்கடக சிங்கி பாஷாணம்       -  நாகத்தை செந்தூரமாக்கும்.

5.கல்பாஷாணம்                              -  காரீயத்தைக் கட்டும்.

6.கார்முகில் பாஷாணம்              -  அரிதாரத்தைக் கட்டும்.

7.கெந்தி பாஷாணம்                        -  இலிங்கத்தைச் சொர்ணமாக்கும்.

8.கோளக பாஷாணம்                     -  வெண்வங்கத்தை செந்தூரமாக்கும்.

9.கௌரி பாஷாணம்                       -  சூதத்தை செம்பாக்கும்.

10.சங்கு பாஷாணம்                        -  சூதத்தை செம்பாக்கும்.

11.சிலாமத பாஷாணம்                  -  செம்பை வெள்ளியாக்கும்.

12.பாதரசம்                                          -  காந்தத்தை ஈயமாக்கும்.

13.தாளம்பக பாஷாணம்                -  நாகத்தை தங்கமாக்கும்.

14.துத்தம்                                              -  தாளகத்தை வெள்ளியாக்கும்.

15.தொட்டி பாஷாணம்                   -  நாகத்தைச் செம்பாக்கும்

16.மனோசிலை                                 -  ரசத்தைக் கட்டும்.

17.இலிங்கம்                                       -  செந்தூரத்திற்கு ஆதி.

18.வீரம்                                                 -  காரீயத்தைச் செம்பாக்கும்.

19.வைக்கிராந்தப் பாஷாணம்     -  நவலோகங்ளையும் நீற்றும்.

20.அயத்தொட்டிப் பாஷாணம்    -  களங்குகளுக்கு ஆதி.

21.இரசித பாஷாணம்                      -  நவலோகங்களையும் வெள்ளையாக்கும்.

22.காக பாஷாணம்                           -  தாரத்தை கறுப்பாக்கும்.

23.கெந்தக பாஷாணம்                    -  ரசத்தை செந்தூரமாக்கும்.

24.சவ்வீரம்                                          -  நவலோகத்தை சுண்ணமாக்கும்.

25.துத்தம்                                              -  தாரத்தை நீற்றும்.

26.நாக பாஷாணம்                           -  நாகத்தை தங்கமாக்கும்.

27.நீலக்கல் பாஷாணம்                 -  வெள்ளியில் பசுமை நிறம் தரும்.

28.மிருதார் சிங்கி                              -  இரசத்திற்கு ஆதி.

29.வெள்ளைப் பாஷாணம்           -  வெள்ளீயத்தை சுண்ணமாக்கும்.

30.வங்க நீரால்                                  -  கெந்தகத்தைக் கட்டலாம்.

31.கருவங்க நீரால்                          -  இரசத்தையும், கெந்தகத்தையும் கட்டலாம்.








Share:

Saturday, April 7, 2018

இரசவாதம்

இரசவாதம்

''உப்பை யறிந்தவ னேவா திசகத்
  துப்பை யொழிந்த வனே யோகி
  தப்பிலை யேபூமி நாத மகிமையைச்
  சார்ந்து பாரடி ஞானப்பெண்ணே!
  வீட்டி லிருக்குதொரு மூலம் வெளிக்
  காட்டிலிருக்கு திருமூலம்
  மாட்டி லிருக்கும் பெரியோர்க்கு
  ரசவாதமி தல்லவோ ஞானப்பெண்ணே!''

                               -மதுரை வாலைசாமி ஞானக்கும்மி.
Share:

வாத யோகம்

வாத யோகம்
"உண்ணவே மவுனரச வாத யோகம்
  உத்தமனே வானிரச வாத தாது
  விண்ணுறையும் யோகரச வாதத்திற்கு

  விந்து நாதப் பொருளை விளம்பக்கேளு
  தன்னிரையும் தாது ரசவாதத்திற்குச்
  சதுரான லவணமதே விந்து நாதம்
  பண்ணரிய விரண்டிற்கும் பேரொன்றாகும்
  பாடையினாலுவமானம் பற்றி பாறே
  பாரப்பா விரண்டிற்கு மொரு பேரிட்டு
  பாடினா ருவமானப் பாடையாலே
  வாரப்பா தாது விந்து வழலைக்கும் பேர்
  மவுனமென்ற வாசியோக வாழ்க்கைக்கும் பேர்
  ஆரப்பா விதையெடுத்ததிலே சொல்வார்
  அதையெடுத்ததில் புகட்டியது வாமென்பர்
  கூறப்பா நாதவிந்து முடித்த பேர்க்குக்
  கூச்சமற்ற ஞானமெனும் பொருள் தான்வாய்க்கும்
  சாரப்பா லவணவிந்துபூமி நாதம்
  
  தமையறிந்து முடித்தவர்க்கு தங்கமாமே"
--(அகத்தியர் பரிபாஷை திரட்டு 500--முதல் காண்டம்)


Share:

இரசவாதமும் மூலிகையும்

இரசவாதமும் மூலிகையும்

     இரசவாதத்தில் ஈடுபடுபவர்கள் மூலிகைகளையும் அதனுடைய வேதிவினையை நன்கு அறிந்திருந்தால் அவர்கள் இரசவாதத்தில் அடுத்த படியைத் தொடர இலகுவாக இருக்கும். உதாரணத்திற்கு சில மூலிகைகளின் செயல்களை கீழே காண்போம். 

1.ஓரிதழ் தாமரை      -    கெந்தியை பற்பமாக்கும்.
2.கரு ஊமத்தை         -    பாதரசத்தைக் கட்டும்.
3.குமரிச்சாறு             -     இரும்பையும் துரும்பாக்கும்.
4.வேலிப்பருத்தி       -   எதையும் சுண்ணமாக்க உதவும்.
5.புகையிலை           -    வெடியுப்பைச் சுண்ணமாக்கும்.
6.வெண் பூசணி       -    பாஷாண நச்சு வேக்காடு, இடு மருந்து போக்கும்.
Share:

உப்பு, பாஷாண வேதியியல் வினைகள்

உப்பு, பாஷாண வேதியியல் வினைகள்
              
         இரசவாதிகள் தெரிந்துகொள்ள வேண்டிய உப்பு மற்றும் பாஷாணங்களின் வேதி வினைகளைப் பற்றி காண்போம்.

1.அஞ்சனக்கல்                                     -   அயத்தைப் பற்பமாக்கும்.
2.அப்பிரகம்                                                          -   பாதரசத்தைக் கட்டும்.
3.அரிதாரம்                                           -     வங்கத்தை நீற்றும், கட்டும்.
4.கற்கடக சிங்கி பாஷாணம்            -     நாகத்தை செந்தூரமாக்கும்.
5.கல்பாஷாணம்                          -  காரீயத்தைக் கட்டும்.
6.கார்முகில் பாஷாணம்                  -   அரிதாரத்தைக் கட்டும்.
7.கெந்தி பாஷாணம்                          -   இலிங்கத்தைச் சொர்ணமாக்கும்.
8.கோளக பாஷாணம்                       -  வெண்வங்கத்தை செந்தூரமாக்கும்.
9.கௌரி பாஷாணம்                         -   சூதத்தை செம்பாக்கும்.
10.சங்கு பாஷாணம்                          -   சூதத்தை செம்பாக்கும்.
11.சிலாமத பாஷாணம்               -   செம்பை வெள்ளியாக்கும்.
12.பாதரசம்                                -  காந்தத்தை ஈயமாக்கும்.
13.தாளம்பக பாஷாணம்                -    நாகத்தை தங்கமாக்கும்.
14.துத்தம்                                           -  தாளகத்தை வெள்ளியாக்கும்.
15.தொட்டி பாஷாணம்                   -   நாகத்தைச் செம்பாக்கும்
16.மனோசிலை                                -   ரசத்தைக் கட்டும்.
17.இலிங்கம்                                     -  செந்தூரத்திற்கு ஆதி.
18.வீரம்                                              -  காரீயத்தைச் செம்பாக்கும்.
19.வைக்கிராந்தப் பாஷாணம்      -  நவலோகங்ளையும் நீற்றும்.
20.அயத்தொட்டிப் பாஷாணம்     -   களங்குகளுக்கு ஆதி.
21.இரசித பாஷாணம்                -    நவலோகங்களையும் வெள்ளையாக்கும்.
22.காக பாஷாணம்                         -    தாரத்தை கறுப்பாக்கும்.
23.கெந்தக பாஷாணம்             -  ரசத்தை செந்தூரமாக்கும்.
24.சவ்வீரம்                             -  நவலோகத்தை சுண்ணமாக்கும்.
25.துத்தம்                                        -   தாரத்தை நீற்றும்.
26.நாக பாஷாணம்                       -  நாகத்தை தங்கமாக்கும்.
27.நீலக்கல் பாஷாணம்              -  வெள்ளியில் பசுமை நிறம் தரும்.
28.மிருதார் சிங்கி                   -   இரசத்திற்கு ஆதி.
29.வெள்ளைப் பாஷாணம்         -  வெள்ளீயத்தை சுண்ணமாக்கும்.
30.வங்க நீரால்                              -  கெந்தகத்தைக் கட்டலாம்.
31.கருவங்க நீரால்                       -  இரசத்தையும், கெந்தகத்தையும் கட்டலாம்.


Share:

பாஷாண உபரசங்களும் அதன் வேதிவினைகளும்

பாஷாண உபரசங்களும் அதன் வேதிவினைகளும்.

1.துரிசு                                                 -   இரசத்தைக் கொல்லும்.
2.பொன் நிமிளை                             -   தங்கத்தை சுண்ணமாக்கும்.
3.கஞ்ச நிமிளை                               -   வெண்கலத்தை சுண்ணமாக்கும்.
4.உலோக நிமிளை                         -    இரும்பை குருவாக்கும்.
5.காக நிமிளை                                  -    தராவைச் சுண்ணமாக்கும்.
6.முத்துச் சிப்பி                                 -    நவச்சாரத்தைக் கட்டும்.
7.அஞ்சனக்கல்                                 -    சரக்கெல்லாம் ஈயமாக்கும்.
8.இராசவர்த்தக்கல்                        -    நவலோகத்தை வேதையாக்கும்.
9.நண்டு                                                -    சூதத்தைக் கட்டும்.
10.கிளிஞ்சல்                                      -   வங்கம் பாஷாணம் முதலியவைகளின் 
                                                                      தோசத்தைப் போக்கும்.
11.யானைக் கொம்பு                        -   வெடியுப்புக் கம்பியைக் கட்டும்.
12.பன்றிக் கொம்பு                            -   வீரம் குருவாகும்.
13.மாட்டுக் கொம்பு                          -   பாஷாணம் செந்தூரமாகும்.
14.முத்து                                               -   இரசத்தை மணியாக்கும்.
15.பவளம்                                             -   இரசத்தை ஏமமாக்கும்.
16.சூடாலைக்கல்                              -   நவலோகங்கள் செந்தூரமாகும்.
17.மஞ்சட்கல்                                     -   கெந்தகம் செம்பாகும்.
18.மாக்கல்                                           -   தாளகம் ஈயமாகும்.
19.சிலாவங்கம்                                  -   பாஷாணம் பற்பமாகும்.
20.அன்னபேதி                                    -   இலிங்கம் மெழுகாகும்.
21.சொர்ணபேதி                                 -   நவலோகத்தையும் தண்ணீராக்கும்.
22.உவர்மண்                                       -   தாது பற்பமாகும்.
23.கருமணல்                                      -   தங்கத்தை குருவாக்கும்.
24.செம்மண்                                        -   காரீயம் செம்பாகும்.
25.சுத்தமண்                                        -    அயம் செம்பாகும்.
26.பன்றி முள்                                     -   இரசம் வெண்மையாகும்.
27.எலி முள்                                        -    வீரம் செம்பாகும்.
28.மீன் எலும்பு                                  -    கௌரி பாஷாணம் ஈயமாகும்.
29.முள் சங்கு                                     -   வெள்ளை ஈயமாகும்.
30.நாகப்பச்சை                                   -    உருக்கு செம்பாகும்.
31.மரகதப் பச்சை                             -   அயம் செம்பாகும்.
32.வெள்ளை சுக்கான் கல்             -   வெள்ளீயம் வெள்ளியாகும்.
33.காகச் சிலை                                  -    காந்தம் செம்பாகும்.
34.மந்தாரச் சிலை                            -    சூடன் செம்பாகும்.
35.சாலக் கிராமம்                              -    தங்கம் செம்பாகும்.
36.மாந்துளிர் கல்                              -    கெந்தகம் செம்பாகும்.
37.முட்டை                                           -    வெள்ளீயத்தில் நீர்வாங்கும்.
38.கற்களி                                              -    வெள்ளீயம் செம்பாகும்.
39.செம்பு மணல்                                -    சவ்வீரம் செம்பாகும்.
40.நாக மணல்                                     -    இரசம் செம்பாகும்.
41.காரீய மணல்                                 -    இலிங்கம் செம்பாகும்.
42.உலோக மணல்                             -    மனோசிலை செம்பாகும்.
43.கடுஞ்சுக்கான்                                 -    குதிரைப் பல் பாஷாணம் செம்பாகும்.
44.நாகச்சிலை                                     -     நவலோகம் செந்தூரமாகும்.
45.ஏம சிலை                                         -    பாஷாணங்கள் செந்தூரமாகும்.
46.காரியச் சிலை                                -     பச்சை கற்பூரம் செம்பாகும்.
47.வெண்கலச் சிலை                        -     வெடியுப்பு செம்பாகும்.
48.செம்புச் சிலை                                 -    கல்லுப்பு செயமாகும்.
49.ஆட்டுக் கொம்பு                              -    உப்பெல்லாம் சுண்ணமாகும்.

Share:

AT 9

AT 2

''I cannot teach anybody anything, I can only make them think.''
We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!

AT 6

Follow by Email

Subscribe To Get All The Latest Updates!

email updates

Social Meadia

Blog Archive

New Posts

AT 7