இரசவாதமும் மூலிகையும்
இரசவாதத்தில் ஈடுபடுபவர்கள் மூலிகைகளையும் அதனுடைய வேதிவினையை நன்கு அறிந்திருந்தால் அவர்கள் இரசவாதத்தில் அடுத்த படியைத் தொடர இலகுவாக இருக்கும். உதாரணத்திற்கு சில மூலிகைகளின் செயல்களை கீழே காண்போம்.
1.ஓரிதழ் தாமரை - கெந்தியை பற்பமாக்கும்.
2.கரு ஊமத்தை - பாதரசத்தைக் கட்டும்.
3.குமரிச்சாறு - இரும்பையும் துரும்பாக்கும்.
4.வேலிப்பருத்தி - எதையும் சுண்ணமாக்க உதவும்.
5.புகையிலை - வெடியுப்பைச் சுண்ணமாக்கும்.
6.வெண் பூசணி - பாஷாண நச்சு வேக்காடு, இடு மருந்து போக்கும்.