பாஷாண உபரசங்களும் அதன் வேதிவினைகளும்.
1.துரிசு - இரசத்தைக் கொல்லும்.
2.பொன் நிமிளை - தங்கத்தை சுண்ணமாக்கும்.
3.கஞ்ச நிமிளை - வெண்கலத்தை சுண்ணமாக்கும்.
4.உலோக நிமிளை - இரும்பை குருவாக்கும்.
5.காக நிமிளை - தராவைச் சுண்ணமாக்கும்.
6.முத்துச் சிப்பி - நவச்சாரத்தைக் கட்டும்.
7.அஞ்சனக்கல் - சரக்கெல்லாம் ஈயமாக்கும்.
8.இராசவர்த்தக்கல் - நவலோகத்தை வேதையாக்கும்.
9.நண்டு - சூதத்தைக் கட்டும்.
10.கிளிஞ்சல் - வங்கம் பாஷாணம் முதலியவைகளின்
தோசத்தைப் போக்கும்.
11.யானைக் கொம்பு - வெடியுப்புக் கம்பியைக் கட்டும்.
12.பன்றிக் கொம்பு - வீரம் குருவாகும்.
13.மாட்டுக் கொம்பு - பாஷாணம் செந்தூரமாகும்.
14.முத்து - இரசத்தை மணியாக்கும்.
15.பவளம் - இரசத்தை ஏமமாக்கும்.
16.சூடாலைக்கல் - நவலோகங்கள் செந்தூரமாகும்.
17.மஞ்சட்கல் - கெந்தகம் செம்பாகும்.
18.மாக்கல் - தாளகம் ஈயமாகும்.
19.சிலாவங்கம் - பாஷாணம் பற்பமாகும்.
20.அன்னபேதி - இலிங்கம் மெழுகாகும்.
21.சொர்ணபேதி - நவலோகத்தையும் தண்ணீராக்கும்.
22.உவர்மண் - தாது பற்பமாகும்.
23.கருமணல் - தங்கத்தை குருவாக்கும்.
24.செம்மண் - காரீயம் செம்பாகும்.
25.சுத்தமண் - அயம் செம்பாகும்.
26.பன்றி முள் - இரசம் வெண்மையாகும்.
27.எலி முள் - வீரம் செம்பாகும்.
28.மீன் எலும்பு - கௌரி பாஷாணம் ஈயமாகும்.
29.முள் சங்கு - வெள்ளை ஈயமாகும்.
30.நாகப்பச்சை - உருக்கு செம்பாகும்.
31.மரகதப் பச்சை - அயம் செம்பாகும்.
32.வெள்ளை சுக்கான் கல் - வெள்ளீயம் வெள்ளியாகும்.
33.காகச் சிலை - காந்தம் செம்பாகும்.
34.மந்தாரச் சிலை - சூடன் செம்பாகும்.
35.சாலக் கிராமம் - தங்கம் செம்பாகும்.
36.மாந்துளிர் கல் - கெந்தகம் செம்பாகும்.
37.முட்டை - வெள்ளீயத்தில் நீர்வாங்கும்.
38.கற்களி - வெள்ளீயம் செம்பாகும்.
39.செம்பு மணல் - சவ்வீரம் செம்பாகும்.
40.நாக மணல் - இரசம் செம்பாகும்.
41.காரீய மணல் - இலிங்கம் செம்பாகும்.
42.உலோக மணல் - மனோசிலை செம்பாகும்.
43.கடுஞ்சுக்கான் - குதிரைப் பல் பாஷாணம் செம்பாகும்.
44.நாகச்சிலை - நவலோகம் செந்தூரமாகும்.
45.ஏம சிலை - பாஷாணங்கள் செந்தூரமாகும்.
46.காரியச் சிலை - பச்சை கற்பூரம் செம்பாகும்.
47.வெண்கலச் சிலை - வெடியுப்பு செம்பாகும்.
48.செம்புச் சிலை - கல்லுப்பு செயமாகும்.
49.ஆட்டுக் கொம்பு - உப்பெல்லாம் சுண்ணமாகும்.