தமிழ் மக்களின்
அணு அறிவியல்
(குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல்)
இந்த உலகில் உள்ள அனைத்துமே அணுக்களால் உருவானதுதான்.
கடவுள் இந்த உலகை படைத்திருந்தாலும். கடவுள் படைத்த
அனைத்திலுமே அறிவியல் வினைபுரிதல்
விதிமுறைகளுக்கு உட்பட்டே உருவாக்கி இருப்பதை நான் பார்க்கிறேன்.
உயர் மற்றும் மிக உயர்ந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல்
மூலம் மட்டுமே தற்போதுள்ள அறிவியலில் அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவும்
செய்ய முடியும் என்கின்றர் விஞ்ஞானிகள்.
உலகத்தில் இதுவரை வாழ்ந்து மறைந்த மற்றும் தற்போது உலகில்
உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எந்த ஒரு விஞ்ஞானியும் என்னால் குறைந்த மற்றும்
மிக குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதலை செய்ய முடியும் என்று சொல்லிய ஒரு
வரலாற்று ஆதாரங்களும் இல்லை. ஆனால் உலகின் மிக பழமையான மொழியான தமிழ் மொழி பேசும்
மக்களின் வழி வந்த ஒரு தமிழனாக நான் சொல்கிறேன். மிகவும் குறைந்த ஆற்றல்
அணுக்கரு வினைபுரிதலை செய்ய என்னால் முடியும்.
குறைந்த மற்றும் மிக குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல்
அணு அறிவியலை பயன்படுத்தி அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவும் என்னால் செய்ய
முடியும்.
அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக
மட்டுமே அணு அறிவியலால் விளக்கம் சொல்கிறேன். ஆனால் என் பார்வையில் இந்த குறைந்த
மற்றும் மிக குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல் அணு
அறிவியல் பூமியில் இயற்கையாக நிகழ்வதால்தான். ஒரு பொருள் வேறு பொருளாக பரிணாம
வளச்சியடைந்து மாற்று பொருளாக மாற்றம் பெறுகிறது.
மேலும் அணுக்கரு வினைபுரிதல் பூமியில் இயற்கையாக நிகழ்வதால் பல இயற்கை
வளங்கள் பரிணாம வளர்ச்சி பெறுகின்றன. அதுமட்டுமல்ல நோய்களால் பாதிக்கப்படாமல் மனித உடலை பரிணாம
வளர்சியடைய செய்ய மிகவும் குறைவான ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல் அறிவியல் மூலம் சாத்தியப்படுத்த முடியுமென நான் மிகவும்
உறுதியாக நம்புகிறேன்.
கடவுளுக்கு மதம் இல்லை. உலகில் வாழும் மனிதகுலம்
அனைவருக்கும் ஒரே ஒரு கடவுள் மட்டும்தான் என்பதை உணர்ந்து உலகில்
வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் உண்மையான கடவுளை பின்பற்றி நற்செயல் செய்வதே
அழியா உடலை பெறும் வழியாகும். தவறான
அரசியல் வாதிகளையும், தவறான
மதவாதிகளையும் நம்பி நீங்களும் தவறான
வழியில் போகாதீர்கள். விழிப்பாய் இருங்கள்
அவரவர் வாழ்வின் முடிவு அவரவர் கையில்.
அதனால் சரியான பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றுங்கள்.
உலகின் அதிநவீன சக்திவாய்ந்த ஆயுதம்கொண்டு தாக்கினாலும்
இயற்கையை வெல்ல முடியாது என்பது மனிதர்களுக்கு புரியும் அப்படி
புரியவில்லையென்றால் அவர்கள் மனிதர்களே இல்லை என்பேன். ஆனால் இயற்கையில் இயங்கும்
அறிவியலை புரிந்து கொண்டால் இயற்கையை மனிதகுலத்திற்கு தீங்கு விளைவித்து விடாமல்
தடுக்க முடியும். வல்லரசுகளின் ஆயுதங்களால் வெல்ல முடியாத இயற்கையை அறிவால்
மட்டுமே வெல்ல முடியும். இயற்கையை வெல்ல முடிந்த எந்த ஒரு நபராலும் வல்லரசுகளின்
ஆயுதத்தை வெல்வது கடினமல்ல என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இயற்கையாக இயங்கிக் கொண்டிருக்கும் அணு அறிவியலால் இயற்கை
இயங்குவதை நாம் முழுமையாக அறிந்தால் மட்டுமே இயற்கையை பாதுகாக்க முடியும் என்று
நான் நம்புகிறேன். நாம் வாழும் பூமியை நம்மால் மறுசீரமைத்து மனிதன் வாழ ஏற்ற
பூமியாக மாற்ற முடியாவிட்டால் மனிதர்கள் வாழ ஏற்ற கிரகமாக ஒரு புதிதாக
கிரகத்தை தேடி கண்டறிந்து சீரமைத்து
வாழ்வதும் சாத்தியமற்றதே.
பொதுவாக உலக அளவில் ரசவாதம் என்றாலே போலி அறிவியல் என்று
சொல்கின்றனர். ரசவாதம் என்பது போலி
அறிவியல் என்று ரசவாதத்தில் தோற்றவர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனால் தமிழர்களின் ரசவாதத்தில் உள்ள ஒரு அறிவியல்
மிகவும் குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல்
அறிவியல் என்று நான் சொல்கிறேன். மேலும்
தமிழ் ரசவாதத்தில் இன்னும் பல
இயற்கை சார்ந்த அறிவியல் உள்ளதாகவே நான் நம்புகிறேன்.
இயற்கையாக நிகழும் அணுக்கரு வினைபுரிதல் அறிவியல் தமிழ்
ரசவாதத்தில் இருக்கும் ஒரு அறிவியல் என்பதை இப்போது புரிந்து கொள்வார்கள் அறிவியல்
ஆராய்ச்சியாளர்கள். தமிழ் மொழி தவிர உலகில் உள்ள மொழிகளில் வேற்று மொழிகளில் உள்ள
ரசவாதத்தில் அறிவியல் இருக்கிறதா என்பதை வேற்று மொழிகள் தெரிந்தவர்கள் சொன்னால்
மட்டும்தான் தெரியும்.
நான் இன்று சொல்கிறேன் என் தாய்மொழி மிக பழமையான மொழி
மட்டுமல்ல இயற்கையை பாதுகாக்கும் அறிவியலும் என் தாய் மொழியில் உள்ளது. பூமிக்கு அடியில் அகழாய்வு மேற்கொண்டு கிடைத்த தமிழர்களின்
அறிவியல் ஆதாரங்களை மறைத்து தடுத்திருக்கலாம். ஆனால் இனி தமிழர்களின் அறிவியலை உலக மக்களுக்கு தெரியமல் எந்த ஒரு நபராலும்
மறைக்க முடியாது.
உலகின் நிலப்பரப்பில் வாழும் மக்களை அடிமைபடுத்தி ஆட்சி
நடத்த தமிழர்கள் நினைப்பதில்லை ஆனால்
அதற்கு மாறாக உலக நிலப்பரப்பில் வாழும் மனிதகுலத்தை நோயின்றி நீண்ட ஆயுளோடு
மகிழ்ச்சியாக வாழ வைக்கும் சிந்தனை உள்ளவர்கள் தமிழர்கள்.
14-04-2021
அமல்
0 Comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.