We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!
I can't teach anyone anything, but I'll post some of what I've learned here. < > என்னால் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, ஆனால் நான் கற்றுக்கொண்ட சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

Friday, November 30, 2018

எலுமிச்சம் பழம்


எலுமிச்சம் பழத்தை   மாந்திரீகத்திற்கு   ஏன்   பயன்படுத்துகின்றனர் என்று தெரியுமா?






இன்றைய காலகட்டத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட எலுமிச்சம் பழ வகைகள் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் நமக்கு தெரிந்ததும் நாம் பயன்படுத்துவதும் இரண்டு வகைகள்தான். ஒன்று நாட்டு எலுமிச்சம் பழம் மற்றொன்று கொடி எலுமிச்சம் பழம்.

எலுமிச்சம் பழத்தை சர்பத் போட்டு குடிப்பதும் ஊறுகாய் போடவும் பல வகைகளில்  உணவாக பயன்படுத்துவதையும் நாம் அறிந்ததே மேலும் வைத்தியத்திற்கு பயன்படுத்துவதையும் நாம் அனைவரும்  நன்கு அறிந்த விசயம்தான்.

அடுத்து சுப காரியங்களுக்கு பயன்படுத்துவதில் எலுமிச்சம் பழத்திற்கே முதலிடம் எலுமிச்சம் பழத்தை திருஸ்டி களிக்கவும் மற்றும் மந்திர தந்திர வேலைகளுக்கும்  பயன்படுத்துவதையும் நாம் அனைவரும் அறிந்ததே ஆனால்  எலுமிச்சம் பழத்தை மட்டும் ஏன் பயன்படுத்துகின்றனர்.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும். உலோகங்களுக்கு மட்டும்தான் மந்திரங்களை உள்வாங்கும் சக்தி உண்டு அதுவும் குறிப்பாக தங்கம் வெள்ளி செம்பு இந்த மூன்று உலோகங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இன்னம் கொஞ்சம் விபரமாகவே சொல்கிறேன்.  யந்திரம் மற்றும் தாயத்து பற்றி நீங்கள் அறிந்ததுதான். இவை இரண்டையும் உலோக தகடுகளில் மந்திரங்களை உரு ஏற்றி செய்கின்றனர். தங்க தகட்டில் மந்திரங்களை உரு ஏற்றினால் நீண்ட காலம் பயன்படுத்த முடியும் என்றும் வெள்ளி தகட்டில் மந்திரங்களை உரு ஏற்றினால் தங்கத்தைவிட குறைவான காலமும்.  செம்பு தகட்டில் மந்திரங்களை உரு ஏற்றினால்  தங்கம் மற்றும் வெள்ளியைவிட குறைவான காலம்தான் மந்திரங்கள் பயன்தருமாம். உலோகத்திற்கும் மந்திரத்திற்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்திருக்கும்.

எலுமிச்சம்பழத்தில் செம்பு சத்து அதிகமாக இருக்கும் காரணத்தினால்தான் மந்திர தந்திர வேலைகளுக்கு எலுமிச்சம்பழத்தை பயன்படுத்துகின்றனர். என்பது இப்போது புரிந்திருக்கும்.









Share:

Saturday, April 28, 2018

Can You Turn Lead into GOLD?

Can You Turn Lead into GOLD?




         இந்த வீடியோவை பார்த்திருப்பீர்கள் இதுதான் தற்போதைய அறிவியல் இது இந்த வீடியோவில் சொல்வது எந்த அளவு சாத்தியம் என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் நமது தமிழ் இரசவாத அறிவியலின் பெருமை  புரியும்படி விரைவில் நான் கூறுவேன். விரைவில் என்றதும் உடனே எதிர் பார்க்கவேண்டாம் இது எளிதான காரியம் அல்ல அதற்கு கால தாமதம் ஆகும். 



Share:

Turn Lead into Gold!


Turn Lead into Gold! || MinuteLaboratory #4





Share:

Sunday, April 8, 2018

MERCURY LINGAM

சுமார் 11 கிலோ எடையுள்ள பாதரச லிங்கம்

சுமார் 1 கிலோ எடையுள்ள பாதரச லிங்கம்

Share:

MERCURY NANTHI

பாதரச நந்தி

Share:

இரசமணி

இரசமணி 

 ஒரு மணி சுமார் 10 கிராம் எடை



Hover over the image:

Pineapple
Share:

Saturday, April 7, 2018

இரசவாதம்

இரசவாதம்

''உப்பை யறிந்தவ னேவா திசகத்
  துப்பை யொழிந்த வனே யோகி
  தப்பிலை யேபூமி நாத மகிமையைச்
  சார்ந்து பாரடி ஞானப்பெண்ணே!
  வீட்டி லிருக்குதொரு மூலம் வெளிக்
  காட்டிலிருக்கு திருமூலம்
  மாட்டி லிருக்கும் பெரியோர்க்கு
  ரசவாதமி தல்லவோ ஞானப்பெண்ணே!''

                               -மதுரை வாலைசாமி ஞானக்கும்மி.
Share:

வாத யோகம்

வாத யோகம்
"உண்ணவே மவுனரச வாத யோகம்
  உத்தமனே வானிரச வாத தாது
  விண்ணுறையும் யோகரச வாதத்திற்கு

  விந்து நாதப் பொருளை விளம்பக்கேளு
  தன்னிரையும் தாது ரசவாதத்திற்குச்
  சதுரான லவணமதே விந்து நாதம்
  பண்ணரிய விரண்டிற்கும் பேரொன்றாகும்
  பாடையினாலுவமானம் பற்றி பாறே
  பாரப்பா விரண்டிற்கு மொரு பேரிட்டு
  பாடினா ருவமானப் பாடையாலே
  வாரப்பா தாது விந்து வழலைக்கும் பேர்
  மவுனமென்ற வாசியோக வாழ்க்கைக்கும் பேர்
  ஆரப்பா விதையெடுத்ததிலே சொல்வார்
  அதையெடுத்ததில் புகட்டியது வாமென்பர்
  கூறப்பா நாதவிந்து முடித்த பேர்க்குக்
  கூச்சமற்ற ஞானமெனும் பொருள் தான்வாய்க்கும்
  சாரப்பா லவணவிந்துபூமி நாதம்
  
  தமையறிந்து முடித்தவர்க்கு தங்கமாமே"
--(அகத்தியர் பரிபாஷை திரட்டு 500--முதல் காண்டம்)


Share:

இரசவாதமும் மூலிகையும்

இரசவாதமும் மூலிகையும்

     இரசவாதத்தில் ஈடுபடுபவர்கள் மூலிகைகளையும் அதனுடைய வேதிவினையை நன்கு அறிந்திருந்தால் அவர்கள் இரசவாதத்தில் அடுத்த படியைத் தொடர இலகுவாக இருக்கும். உதாரணத்திற்கு சில மூலிகைகளின் செயல்களை கீழே காண்போம். 

1.ஓரிதழ் தாமரை      -    கெந்தியை பற்பமாக்கும்.
2.கரு ஊமத்தை         -    பாதரசத்தைக் கட்டும்.
3.குமரிச்சாறு             -     இரும்பையும் துரும்பாக்கும்.
4.வேலிப்பருத்தி       -   எதையும் சுண்ணமாக்க உதவும்.
5.புகையிலை           -    வெடியுப்பைச் சுண்ணமாக்கும்.
6.வெண் பூசணி       -    பாஷாண நச்சு வேக்காடு, இடு மருந்து போக்கும்.
Share:

உப்பு, பாஷாண வேதியியல் வினைகள்

உப்பு, பாஷாண வேதியியல் வினைகள்
              
         இரசவாதிகள் தெரிந்துகொள்ள வேண்டிய உப்பு மற்றும் பாஷாணங்களின் வேதி வினைகளைப் பற்றி காண்போம்.

1.அஞ்சனக்கல்                                     -   அயத்தைப் பற்பமாக்கும்.
2.அப்பிரகம்                                                          -   பாதரசத்தைக் கட்டும்.
3.அரிதாரம்                                           -     வங்கத்தை நீற்றும், கட்டும்.
4.கற்கடக சிங்கி பாஷாணம்            -     நாகத்தை செந்தூரமாக்கும்.
5.கல்பாஷாணம்                          -  காரீயத்தைக் கட்டும்.
6.கார்முகில் பாஷாணம்                  -   அரிதாரத்தைக் கட்டும்.
7.கெந்தி பாஷாணம்                          -   இலிங்கத்தைச் சொர்ணமாக்கும்.
8.கோளக பாஷாணம்                       -  வெண்வங்கத்தை செந்தூரமாக்கும்.
9.கௌரி பாஷாணம்                         -   சூதத்தை செம்பாக்கும்.
10.சங்கு பாஷாணம்                          -   சூதத்தை செம்பாக்கும்.
11.சிலாமத பாஷாணம்               -   செம்பை வெள்ளியாக்கும்.
12.பாதரசம்                                -  காந்தத்தை ஈயமாக்கும்.
13.தாளம்பக பாஷாணம்                -    நாகத்தை தங்கமாக்கும்.
14.துத்தம்                                           -  தாளகத்தை வெள்ளியாக்கும்.
15.தொட்டி பாஷாணம்                   -   நாகத்தைச் செம்பாக்கும்
16.மனோசிலை                                -   ரசத்தைக் கட்டும்.
17.இலிங்கம்                                     -  செந்தூரத்திற்கு ஆதி.
18.வீரம்                                              -  காரீயத்தைச் செம்பாக்கும்.
19.வைக்கிராந்தப் பாஷாணம்      -  நவலோகங்ளையும் நீற்றும்.
20.அயத்தொட்டிப் பாஷாணம்     -   களங்குகளுக்கு ஆதி.
21.இரசித பாஷாணம்                -    நவலோகங்களையும் வெள்ளையாக்கும்.
22.காக பாஷாணம்                         -    தாரத்தை கறுப்பாக்கும்.
23.கெந்தக பாஷாணம்             -  ரசத்தை செந்தூரமாக்கும்.
24.சவ்வீரம்                             -  நவலோகத்தை சுண்ணமாக்கும்.
25.துத்தம்                                        -   தாரத்தை நீற்றும்.
26.நாக பாஷாணம்                       -  நாகத்தை தங்கமாக்கும்.
27.நீலக்கல் பாஷாணம்              -  வெள்ளியில் பசுமை நிறம் தரும்.
28.மிருதார் சிங்கி                   -   இரசத்திற்கு ஆதி.
29.வெள்ளைப் பாஷாணம்         -  வெள்ளீயத்தை சுண்ணமாக்கும்.
30.வங்க நீரால்                              -  கெந்தகத்தைக் கட்டலாம்.
31.கருவங்க நீரால்                       -  இரசத்தையும், கெந்தகத்தையும் கட்டலாம்.


Share:

AT 9

AT 2

''I cannot teach anybody anything, I can only make them think.''

AT 6

Follow by Email

Subscribe To Get All The Latest Updates!

email updates

Social Meadia

Blog Archive

New Posts

AT 7