Tuesday, September 24, 2019
Friday, July 26, 2019
தாளகம்
தாளகம்
(ARSENIC TRISULPHIDE)
தாளகம் இரும்புடன் கலந்து கிடைக்கிறது. சைனா மற்றும் சுமத்ரா ஆகிய நாடுகளில் கிடைப்பதைவிட இந்தியாவில் குறைவான அளவு தாளகம்தான் கிடைக்கிறது.
தாளகம் கனம் உடையது. நெருப்பிலிட்டால் நீல நிற புகை வரும்.
1. சிவந்த அரிதாரம் - சிவந்த கல் போல் இருப்பது.
2. மடல் அரிதாரம் - இரண்டு கரடு அல்லது கட்டி இருப்பது.
3. பொன் அரிதாரம் - பொன் நிறமாக இருப்பது.
4. திரட்டு அரிதாரம் - அடுக்கடுக்காக இருப்பது.
ஏறத்தாழ தாளகத்தின் எல்லா வகைகளும் ஒரே குணத்தை உடையது. பாசாணமும் கந்தகமும் கலந்திருக்கும் சதவீதத்தால் தாளகத்தில் இந்தனை வகைகள்.
சிவந்த அரிதாரம், மடல் அரிதாரம், இரண்டும் மனோசிலை என்றும் கூறுகின்றனர்.
கோழை அகற்றுதல், சுரம் அகற்றுதல், வாந்தி உண்டாக்குதல் முதலிய செய்கைகளை கொண்டது தாளகம்.
' தாளகத்தின் பேருரைக்கத் தாலுகவு ணோய்குட்ட
நீளக் குளிர்காய்ச்ச னீர்க்கபங்க - ணாளகங்கொள்
துட்டப் பறங்கிப்புண் சூழழுகண் மண்டைநோய்
கிட்டப் படுமோ கிளத்து. '
' மந்தாரத் தாலே வளருஞ் சுவாசநோ
யுந்திவரு தீச்சுரநோ யோடுங்காண் - முந்து
தொனிக்கயஞ்செய் யான்கடியுந் தோற்குட்டு மேகுந்
தனிப்பொன் னரிதாரத் தால். '
' காச முடனே கயநோய் கபவாதம்
பேசரிய குன்மமெட்டும் பேருங்காண் - மாசகன்ற
கீற்று மதிநுதலே கேளாயுள் வேதமது
சாற்று மரிதாரத் தால். '
' ஈளை யுடனே யிருமல் குடி விலகுங்
கோழை மலமகலுங் கொம்பனையாய் - நாளு
மடலுறுக யங்கரப்பா னாறாப்புண் ணும்போ
மடலரிதா ரத்தை மதி. '
' மடலரிதா ரத்தில் வருங்கரடி ரண்டு
முடல்விடங்க ளைக்களையு முண்மை - கடல்சூழும்
வையகத்தி லிச்சரக்கை வன்றீயில் வைத்தெடுக்க
ஐயமிலை யென்றே யறி. '
' சிவந்தவரி தாரமது செஞ்சிலைபோற் காட்டு
முவந்ததனை யுண்முறையோ டுண்டா - லிவர்ந்தாழ்
சுரங்குளிர்மா வாதமுடற் சூலைநமை குட்ட
மிரங்குமென நாளு மிசை. '
ஈழை, இருமல், கோழை, இளைப்பு, குட்டம், குளிர் சுரம், பறங்கிப்புண், உடல் குத்தல், நமைச்சல், கபால நோய்கள், நாக்கு நோய்கள் தீர்க்கும்.
ஆயுர்வேத வைத்திய நூல்களில் பத்திர தாளகம், பிண்ட தாளகம், என இரண்டாக சொல்லப்படுகிறது.
பத்திர தாளகம் காய்ச்சலை போக்கவும், உடலை தேற்றவும் பயன்படுகிறது.
பிண்ட தாளகம் வர்ண பொருளாகவும், தாள்களை உருவப்படுத்துவதற்கும், சிதல் பூச்சிகள் பாழ்படுத்தாமல் பாதுகாக்கவும் பயன்படுகிறது.
பீதகி, ஆலம்பி, பிஞ்சனம், பழுப்பு, கோதந்தம், மாலம், அரிதாரம், கால்புத்தி, பொன் வர்ணி, மஞ்சள் வர்ணி, மால் தேவி, அரிதளம், போன்ற பெயர்களும் இதற்கு உண்டு.
இரசவாதத்தில் தாளகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரிதாரத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் வங்கம் செம்பில் கலந்தால் நிறம் கொடுக்கும் என்றும் சொல்கின்றனர்.
Thursday, July 25, 2019
SULPHUR
SULPHUR
Sulfur is one of the natural minerals available on earth It is the primary ingredient, and we get
sulfur from plants.
Sulfur is present in products such as egg white, garlic and onion. Sulfur can be extracted from
other metals such as iron, copper, lead, and mercury.
The red sulfur is luminous at night. It is said to be available only in gold mines. It is said that
most have never seen it.
All three types of sulfur, such as red, white and black, are said to be synthetic.
Sulfur is easily flammable. When burning at 300 degrees, the flame is dim blue. Sulfur can burn
purple when it is burned by excessive heat. If the sulfur burns at 180 degrees, it will start to
evaporate. Sulfur melts at 216 degrees. If sulfur burns from 226 degrees to 280 degrees, it will
turn into full water with a slight yellowish color.
When the sulfur burns from 450 degrees to 600 degrees, the sulfur will form a lighter water. If
the wind is exposed at this time, it will turn yellow without any change.
The two main ingredients for alchemy. It is sulfur and mercury.
It is difficult to find a drug that turns silver into red. You need to first turn silver into black and
then red. The best of these is sulfur.
There is a major defect in this sulfur. In which case the sulfur is added or given out, the
substance dries up. If you melt silver and add sulfur, silver will cause more dryness.
Therefore, the good qualities of sulfur should be taken care of when the bad qualities of sulfur
are removed and matured. These methods have been called by the Tamil alchemists as kattu,
centuram and Paspam.
Tuesday, July 23, 2019
SEVEN SECRET of ALCHEMY in TAMIL ALCHEMY
SEVEN SECRET of ALCHEMY
IN TAMIL ALCHEMY
IN TAMIL ALCHEMY
1. An equal amount of pure red Mercury and pure Sulfur makes Gold.
2. Copper is formed when impure Mercury and impure Sulfur are mixed in equal quantities.
3. Iron is formed when small quantities of impure Mercury and large quantities of impure Sulfur
are mixed in equal quantities.
4. Tin Stannum is caused by excessive amounts of contaminated Mercury and small amounts of
contaminated Sulfur.
5. Lead is formed when high amounts of contaminated Mercury and low levels of highly
contaminated Sulfur are present.
6. Zinc is formed when highly contaminated Sulfur is mixed with impure Mercury.
7. When pure Mercury is mixed in equal quantities and in arsenic Trisulphide, Silver is formed.
Tuesday, April 16, 2019
Friday, February 1, 2019
பாஷாண உபரசங்களும் அதன் வேதிவினைகளும்
பாஷாண உபரசங்களும் அதன் வேதிவினைகளும்
1.துரிசு _ இரசத்தைக் கொல்லும்.
2.பொன் நிமிளை _ தங்கத்தை சுண்ணமாக்கும்.
3.கஞ்ச நிமிளை _ வெண்கலத்தை சுண்ணமாக்கும்.
4.உலோக நிமிளை _ இரும்பை குருவாக்கும்.
5.காக நிமிளை _ தராவைச் சுண்ணமாக்கும்.
6.முத்துச் சிப்பி _ நவச்சாரத்தைக் கட்டும்.
7.அஞ்சனக்கல் _ சரக்கெல்லாம் ஈயமாக்கும்.
8.இராசவர்த்தக்கல் _ நவலோகத்தை வேதையாக்கும்.
9.நண்டு _ சூதத்தைக் கட்டும்.
10.கிளிஞ்சல் _ வங்கம் பாஷாணம் முதலியவைகளின்
தோசத்தைப் போக்கும்.
11.யானைக் கொம்பு _ வெடியுப்புக் கம்பியைக் கட்டும்.
12.பன்றிக் கொம்பு _ வீரம் குருவாகும்.
13.மாட்டுக் கொம்பு _ பாஷாணம் செந்தூரமாகும்.
14.முத்து _ இரசத்தை மணியாக்கும்.
15.பவளம் _ இரசத்தை ஏமமாக்கும்.
16.சூடாலைக்கல் _ நவலோகங்கள் செந்தூரமாகும்.
17.மஞ்சட்கல் _ கெந்தகம் செம்பாகும்.
18.மாக்கல் _ தாளகம் ஈயமாகும்.
19.சிலாவங்கம் _ பாஷாணம் பற்பமாகும்.
20.அன்னபேதி _ இலிங்கம் மெழுகாகும்.
21.சொர்ணபேதி _ நவலோகத்தையும் தண்ணீராக்கும்.
22.உவர்மண் _ தாது பற்பமாகும்.
23.கருமணல் _ தங்கத்தை குருவாக்கும்.
24.செம்மண் _ காரீயம் செம்பாகும்.
25.சுத்தமண் _ அயம் செம்பாகும்.
26.பன்றி முள் _ இரசம் வெண்மையாகும்.
27.எலி முள் _ வீரம் செம்பாகும்.
28.மீன் எலும்பு _ கௌரி பாஷாணம் ஈயமாகும்.
29.முள் சங்கு _ வெள்ளை ஈயமாகும்.
30.நாகப்பச்சை _ உருக்கு செம்பாகும்.
31.மரகதப் பச்சை _ அயம் செம்பாகும்.
32.வெள்ளை சுக்கான் கல் _ வெள்ளீயம் வெள்ளியாகும்.
33.காகச் சிலை _ காந்தம் செம்பாகும்.
34.மந்தாரச் சிலை _ சூடன் செம்பாகும்.
35.சாலக் கிராமம் _ தங்கம் செம்பாகும்.
36.மாந்துளிர் கல் _ கெந்தகம் செம்பாகும்.
37.முட்டை _ வெள்ளீயத்தில் நீர்வாங்கும்.
38.கற்களி _ வெள்ளீயம் செம்பாகும்.
39.செம்பு மணல் _ சவ்வீரம் செம்பாகும்.
40.நாக மணல் _ இரசம் செம்பாகும்.
41.காரீய மணல் _ இலிங்கம் செம்பாகும்.
42.உலோக மணல் _ மனோசிலை செம்பாகும்.
43.கடுஞ்சுக்கான் _ குதிரைப் பல் பாஷாணம் செம்பாகும்.
44.நாகச்சிலை _ நவலோகம் செந்தூரமாகும்.
45.ஏம சிலை _ பாஷாணங்கள் செந்தூரமாகும்.
46.காரியச் சிலை _ பச்சை கற்பூரம் செம்பாகும்.
47.வெண்கலச் சிலை _ வெடியுப்பு செம்பாகும்.
48.செம்புச் சிலை _ கல்லுப்பு செயமாகும்.
49.ஆட்டுக் கொம்பு _ உப்பெல்லாம் சுண்ணமாகும்.
Thursday, January 31, 2019
இரசவாதமும் மூலிகையும்
இரசவாதத்தில் ஈடுபடுபவர்கள் மூலிகைகளையும் அதனுடைய வேதிவினையை நன்கு அறிந்திருந்தால் அவர்கள் இரசவாதத்தில் அடுத்த படியைத் தொடர இலகுவாக இருக்கும்.
உதாரணத்திற்கு சில மூலிகைகளின் செயல்களை கீழே காண்போம்.
1.ஓரிதழ் தாமரை _ கெந்தியை பற்பமாக்கும்.
2.கரு ஊமத்தை _ பாதரசத்தைக் கட்டும்.
3.குமரிச்சாறு _ இரும்பையும் துரும்பாக்கும்.
4.வேலிப்பருத்தி _ எதையும் சுண்ணமாக்க உதவும்.
5.புகையிலை _ வெடியுப்பைச் சுண்ணமாக்கும்.
6.வெண் பூசணி _ பாஷாண நச்சு வேக்காடு, இடு மருந்து போக்கும்.
Wednesday, January 30, 2019
உப்பு, பாஷாண வேதியியல் வினைகள்
இரசவாதிகள் தெரிந்துகொள்ள வேண்டிய உப்பு மற்றும் பாஷாணங்களின் வேதி வினைகளைப் பற்றி காண்போம்.
1.அஞ்சனக்கல் - அயத்தைப் பற்பமாக்கும்.
2.அப்பிரகம் - பாதரசத்தைக் கட்டும்.
3.அரிதாரம் - வங்கத்தை நீற்றும், கட்டும்.
4.கற்கடக சிங்கி பாஷாணம் - நாகத்தை செந்தூரமாக்கும்.
5.கல்பாஷாணம் - காரீயத்தைக் கட்டும்.
6.கார்முகில் பாஷாணம் - அரிதாரத்தைக் கட்டும்.
7.கெந்தி பாஷாணம் - இலிங்கத்தைச் சொர்ணமாக்கும்.
8.கோளக பாஷாணம் - வெண்வங்கத்தை செந்தூரமாக்கும்.
9.கௌரி பாஷாணம் - சூதத்தை செம்பாக்கும்.
10.சங்கு பாஷாணம் - சூதத்தை செம்பாக்கும்.
11.சிலாமத பாஷாணம் - செம்பை வெள்ளியாக்கும்.
12.பாதரசம் - காந்தத்தை ஈயமாக்கும்.
13.தாளம்பக பாஷாணம் - நாகத்தை தங்கமாக்கும்.
14.துத்தம் - தாளகத்தை வெள்ளியாக்கும்.
15.தொட்டி பாஷாணம் - நாகத்தைச் செம்பாக்கும்
16.மனோசிலை - ரசத்தைக் கட்டும்.
17.இலிங்கம் - செந்தூரத்திற்கு ஆதி.
18.வீரம் - காரீயத்தைச் செம்பாக்கும்.
19.வைக்கிராந்தப் பாஷாணம் - நவலோகங்ளையும் நீற்றும்.
20.அயத்தொட்டிப் பாஷாணம் - களங்குகளுக்கு ஆதி.
21.இரசித பாஷாணம் - நவலோகங்களையும் வெள்ளையாக்கும்.
22.காக பாஷாணம் - தாரத்தை கறுப்பாக்கும்.
23.கெந்தக பாஷாணம் - ரசத்தை செந்தூரமாக்கும்.
24.சவ்வீரம் - நவலோகத்தை சுண்ணமாக்கும்.
25.துத்தம் - தாரத்தை நீற்றும்.
26.நாக பாஷாணம் - நாகத்தை தங்கமாக்கும்.
27.நீலக்கல் பாஷாணம் - வெள்ளியில் பசுமை நிறம் தரும்.
28.மிருதார் சிங்கி - இரசத்திற்கு ஆதி.
29.வெள்ளைப் பாஷாணம் - வெள்ளீயத்தை சுண்ணமாக்கும்.
30.வங்க நீரால் - கெந்தகத்தைக் கட்டலாம்.
31.கருவங்க நீரால் - இரசத்தையும், கெந்தகத்தையும் கட்டலாம்.