We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!
I can't teach anyone anything, but I'll post some of what I've learned here. < > என்னால் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, ஆனால் நான் கற்றுக்கொண்ட சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

Friday, March 9, 2018

இரசவாத இரகசியங்கள் ஏழு

 இரசவாத இரகசியங்கள் ஏழு 


1.குற்றமில்லாத சிவப்பு நிற இரசமும் கெந்தியும் சம அளவில் சேர்ந்தால் தங்கம் உண்டாகும்.

2.குற்றமுள்ள இரசமும் கெந்தியும் சம அளவில் சேர்ந்தால் செம்பு உண்டாகும்.              

3.குற்றமுள்ள இரசம் சிறு அளவிலும் குற்றமுள்ள கெந்தி பெரு அளவிலும் சேர அயமுண்டாகும்.

4.குற்றமுள்ள இரசம் பெரிதும், குற்றமுள்ள கெந்தி சிறிதும் சேர வெள்ளீயமுண்டாகும்.

5.குற்றமுள்ள இரசம் அதிகமாகவும், அதை விடக் குற்றம் அதிகமுள்ள கெந்தி குறைவாகவும் சேர காரீயம் உண்டாகும்.

6.குற்றமுள்ள இரசமும், அதைவிட அதிக குற்றமுள்ள கெந்தியும் சேர நாகமுண்டாகும்.

7.சுத்தமான இரசமும் தாளகமும் சம அளவில் சேர வெள்ளி உண்டாகும்.

Share:

HYDRARGYRUM - பாதரசம் (MERCURY)


 பாதரசம் 
 HYDRARGYRUM  -  (MERCURY) 







             மலைகளில்   உள்ள   இயற்கை  சூழ்நிலையால்  மோதல்கள்  உண்டாகும்.  அப்போது  நிலத்தில்  பல  மைல்கள்  ஆழத்தில்  உள்ள தீக்குழம்பு  கொதித்துக்  குமுறி  எரிமலையாக  வெளிவரத்  தொடங்குகிறது  அப்போது  பூகம்ம்  உண்டாகிறது  பூகம்பம்  உண்டாகி  எரிலைத்  தீ  வெளிவந்தவுடன்  நிலத்தின்  குமுறல்  அடங்குகிறது  எரிமலையில்  வெடித்துச்  சிதறிய குழம்புகள்  கொதிக்கும்  நீராக நிலத்தில்  வந்து  தேங்குகின்றது,  அதன்  நடுவிலிருக்கும்  பகுதிகள்  ஆவியாக மாறி  குளிர்ந்தவுடன்  சில வகைப்  பொருட்கள்  கிடைக்கின்றன.  அப்படிக்  கிடைப்பதுதான்  பாதரசம்!  இது  பாதரசமாகவோ  லிங்கமாகவோ  ககிடைப்பதாக  கூறுகின்றனர்.

            ஸ்பெயின்,  கலிபோர்னியா,   இத்தாலி,   ரஷ்யா,  சைனா,  ஜப்பான், முதலிய  நாடுகளில்  இது  கிடைக்கிறது.  இந்தியாவில்  லிங்கத்தில்  இருந்து  வாலை  ரசமாகப்  பிரித்து  எடுக்கப்படுகிறதாம்.

       பொதுவாக  செந்நிறமுடையது   ரசம்,  கருமை  நிறமுடையது  இரசேந்திரன்  மஞ்சள்  நிறமானது  சூதம்.  பல  நிறமுள்ளது  மிச்ரம்  வெள்ளையானது  பாதரசம்  என ஐந்து  வகையாகச்  சொல்லப்படும்.

        இது  அறுசுவைகளையும்  கொண்டது.  குறிப்பாக  இனிப்புச்  சுவை  உடையது.   இது  எந்தப்  பொருளின்  துணையும்  இல்லாமல்  தனித்தே  செயல்படக்  கூடியது.

            வெப்பம்,  சீதம்  ஆகிய இரண்டு  வீரியங்களையும்  உடைய இதை  எந்த  துணை  மருந்தோடு  சேர்த்துக்  கொடுக்கிறோமோ  அதன் தன்மையை  பெறுகிறது.

        ரசத்தை ஏதாவது ஒன்றுடன் சேர்த்து அரைக்கும் பொழுது  நீர்போல்  கலப்பதை  'ஜலகதி'  என்பர்.  அழுக்காக  பிரிந்து   நிற்பதை  'மலமதி'  என்பர்.  எத்தனை  தடவை  அரைத்தாலும்  கலவைப்  பொருளை  விட்டுப்  பிரிந்து  நிற்கும்  நிலையை  'ஹம்சக்தி'  என்பர்.  எரிக்கும்  பொழுது  ஆவியாகும்  நிலை  'தூமகதி'  என்று  சொல்லப்படுகிறது.

             காரம்,  சூதம்,  புண்ணியம்,  கற்பம்,   சாமம்,  சத்துக்குரிய விரோதி,  சாதி,  சூத்திரன்,  துள்ளி,  ஈசன்,  வீரியம்,  சூழ்ச்சி,  நீர்,  விண்ணி நீர்,  வீண்  மருந்து  ரதம்,  சுக்கிலம்,  போகம்,  ஞானம்,  சுயம்புரு,  வண்டு,  நாகம்,   இலக்கியம்,  விஜயம்,  வேகம்,  மூலம்,  சிந்தூரம்,  சிந்து,  பக்கிரம்,  பதிணெண்பத்தி,  பாரதம்,  கனல்,  பூதம்,  இனிமை,  சிவசக்தி,  வருணத்தோன்,  தனிமை,  சங்கரன்  விந்து,  பனிமை,  பராபரம்,  பாய்ந்திடு தூமம்,  கனிமை,  சரக்கிற்  கலந்திடு  சீவன்,  சிவன்  விந்து,  காவன்,  சிதறிக் காண்போன்,  கேசரி,  வேந்தன்,  பாவன்,  அந்தர கந்தன்,  ஆதி,  வராட்டியன்,  சுந்தரம்,  சொற்குறி,  தூமம்,  மதாமரம்,  மந்தரம்,  மஞ்சி,  மாருதம்,  மகிபன்,  விந்தரமசிலை,  கணவன்,  மலைக்குறவன்,  வாசுகி நாதன்,  கந்தன்,  காவக்குடியோன்.  சிவம்,  விந்து,  வஞ்சகம்,  மனவேகி,  கமலினி,  மகாதேவபலம்,  அரவீரியம்,  ரௌத்ரகாரம்,  கந்தம்,  சாறு   என்கின்ற  அநேக பெயர்களால்  இலக்கியங்களில்  குறிப்பிடப்படுவதிலிருந்தே  இதன் பெருமையை உணரலாம்.

             தாது, தாவர, உயிர்ப்பொருட்கள் அனைத்திலும் உள்ள குணங்களை விட ஒப்புவமை இல்லாத தனிச்சிறப்பு பாதரசத்திற்கு உண்டு. இயற்கை அளித்துள்ள அற்புத சரக்கு இது.

         பாதரசத்தை வேதியியல்படி எவன் ஒருவன் பக்குவப்படுத்தக் கற்றுக் கொண்டு விடுகின்றானோ அவனால் எல்லா உலோகங்களையும் செயற்கையாக உருவாக்க  முடியும்.

    இரசவாதத்தில் பாதரசமும் கெந்தகமுமே தலையாய இடத்தை வகிக்கின்றன.

  வேறு சில பொருட்கள் சில நோய்களுக்கு சிறப்பாக சொல்லப்பட்டிருந்தாலும்  வேறு  சில  நோய்களுக்கு  கொடுக்கக்  கூடாதென  மறுக்கப்பட்டுள்ளன.  சீதளத்தில்  உண்டாகும்  நோய்களுக்கு  பயன்படும்  மருந்துகள்  வெப்பத்தினால்  உண்டாகும்  நோய்களுக்கு  பயன்படாது.

            உள்   மருந்தாகப்   பயன்படுத்தப்படும்   சில   மருந்துகள்  வெளி  மருந்தாகப்  பயன்படுத்த இயலாது,  ஒன்றிற்கு  நன்மை  தருவது  மற்றொன்றிற்கு  தீமை  தரும்.  ஆனால்  இரசமோ  அப்படிப்பட்டதல்ல,  சீதளம்,  வெப்பம்  மட்டுமின்றி,   உள்,  வெளி  மருத்துவ  முறைக்கும்  பயன்படும்.  இது  எந்த வீரியங்களில்  உள்ள பொருளோடு  சேருகிறதோ  அந்தப்  பொருளின்  வீரிய்த்துடன்  சேர்ந்து  வலிமை  உண்டாக்கும்  எதிரிடையான வீரியத்துடன்  உள்ள பொருட்களுடன்  சேரும்பொழுது  தனது தனித்தன்மையையும்  விட்டுவிட்டு  அந்தப்  பொருளின்  தன்மைக்கு  ஏற்றபடி  மாறிவிடும்.


"வழிநோய்  கிரந்திகுன்ம மெய்ச்சூலை  புண்குட்

  டழிகாலில்  விந்துவினா  லத்தை - வழியாப் 

  புரியும்விதி  யாதும்  புரியுனோ  யெல்லா

  மிரியும்விதி  யாது  மிலை."


       கண்  நோய்,  கிரந்தி,  எண் வகைக்  குன்மம்,  சூலை, தொழுநோய்  முதலியன போக்கும்.

நட்புச்  சரக்குகள்:

       அப்பிரகம்,   காரீயம்,   சிலை,   கெந்தி,   வீரம்,   தாளகம்,  தொட்டி பாஷாணம்,  வெள்ளி,  செம்பு,  துருசு,  சாரம்,  காரம்,  துத்தம்,  தீமுருகல்,  பவளப்புற்று,  அஞ்சனக்கல்  முதலியவை  நட்புச்  சரக்குகள்.

பகைச்  சரக்குகள்:

        சிங்கி,  கௌரி,  வெள்ளை,  குதிரைப்பல்,  சத்திச்சாரம்,  வெடியுப்பு,  இரும்பு,  காந்தம்,  சூடன்,  பூரம்,  பொன்னம்பர்,  கற்சுவரு,  நிமிளை,  பூநீறு  ஆகியவை  பகைச்  சரக்குககள்  ஆகும்.

            தற்போது  நவீன முறைப்படி  வாலை  முறையில் ( Distillation ) பாதரசம்  கிடைக்கிறது.

            இயற்கையாகத்  தாதுப்  பொருளாகக்  கிடைக்கும்,  இலிங்கத்திலிருந்து  கிடைக்கும்  இரசமே  சுத்தி  செய்த இரசத்திற்கு  ஈடானது.


Share:

வெள்ளி(ARGENTUM)


 வெள்ளி 
(ARGENTUM)












     இது இயற்கையாக பூமியில் விளைகின்ற உலோகம். பெரும்பாலும் பிற தாதுப் பொருட்களுடன் கலந்துதான் கிடைக்கின்றது. சில சமயங்களில் கெந்தகம், ஈயம், தங்கம், தாமிரம் முதலியவைகளுடன் கலந்தும் இருக்கும். இந்தக் கலப்புத் தாதுக்களிலிருந்து வெள்ளி பிரித்தெடுக்கப்படுகின்றது.
வெள்ளியின்  நிறம்  வெண்மை  ஆனால் சிறிது சிவப்பு நிறமும் உண்டு. இது எளிதாகக் கண்ணுக்குப் புலப்படாது. அதிக மிருதுத் தன்மையும், நைப்பும் உடையது. ஆகையால் மிக மெல்லிய கம்பியாக இழுக்கவும், தகடாக அடிக்கவும் முடியும்.






     வெள்ளி  தாமிரத்தை  விட  அதிக  மிருதுவானது.   எளிதில் உருகக் கூடியது. மின் அதிர்வைத் தாங்குவதிலும், சூட்டை வாங்குவதிலும் இது ஒப்பற்றது. இது உருகும்போது பிராண வாயுவை இழுத்துக் கொள்ளும். ஆறியவுடன் அந்த வாயுவை விட்டு விடும். இது கெந்தகத்தை அதிகமாக இழுத்துக் கொள்ளும். அதனால் காற்றில் இது கெடாவிட்டாலும் இலேசாகக் கருத்து விடுகிறது. வெளிக்காற்றில் உள்ள கெந்தகச் சத்தை இழுத்துக் கொள்வதே இதற்குக் காரணமாகும்.
வெள்ளியைக் கரைப்பதற்கு வெடியுப்புத் திராவகமே மிகவும் பயன்படும். கெந்தகத் திராவகத்தினால் வெள்ளியைப் போட்டுக் காய்ச்சினால் கரைந்துவிடும்.

     வெள்ளி அதிக மிருதுவாக இருப்பதால் சீக்கிரம் தேய்ந்துவிடுகிறது. அதனால் ஏழரை முதல் பத்து சதவீதம் தாமிரத்தைச் சேர்த்து நாணயங்கள், சிலைகள், விளக்குகள் செய்கின்றனர். சொன்ன அளவைவிட அதிகமாக தாமிரத்தைச் சேர்த்தும் செய்வதுண்டு.
அரண்பதி, இராதம், இரசிதம், களதவுதம், சுல்லு, சுக்கிரன் துய்யான், தாரம், வெண்தாது, வெண்பொன், மதுரைப் பொது என பல பெயர்கள் இதற்குண்டு.
வெள்ளிய உண்ணுகின்ற கலமாக உபயோகித்து வந்தால் மனக்களிப்பு உண்டாகும். சிலேத்துமக் கோபம், பித்தக் கோபம் முதலியவை நீங்கும். வெள்ளிக் குவளையில் மதுபானத்தை குடித்தால் மிக. விரைவில் மயக்கம் உண்டாகும்.

    அதிக புளிப்பும், குறைந்த துவர்ப்பும், இனிப்புச் சுவையும், சீத வீரியமும் கொண்டது. இது சிறு குடலுக்கு ஒவ்வாது.

" பாய்க்கூட்டங் காட்டாப் யழையசுரந்  தாருவிடம்
   வாய்க்கூட்டச் செய்மேக. வாதமுத--னோய்க்கூட்ட
   மண்டாது காணிகொளு மத்திமே கக்கசிவும்
   வெண்டாது காணிமெய்யை மேல்."

   பைத்தியம், மனக்கலக்கம், வாய்நாற்றம், வாயிலிருந்து கெட்ட நீர் வடிதல், இருமல், மார்பு துடித்தல் முதலிய நோய்களைத் தீர்க்கும்.
இரைப்பை, ஈரல் முதலியவைகளை பலப்படுத்தும். உடலில் உள்ள தீய நீர்களை விரட்டும். இதனை மேற்பூச்சாகப் பூசுவதால் உடம்பின் மேலுள்ள வீக்கம் குணமாகும்.

     இதைக் கண்பொடியாச் செய்து வெள்ளிச் சலாகையால் கண்ணிலிட்டு வர மெல்லிய கண் பூக்கள் தீரும். கண் பார்வையைப் பலப்படுத்தும். உடலுக்குப் புத்துணர்வு கொடுத்து அறிவிற்கு வலிமையைத் தரும்.
வெள்ளியைக் காய்ச்சினால் சிவப்பு, மஞ்சள் அல்லது கருப்பாகத் தோன்றுவதும், வரண்டு வெடித்து கனமில்லாமல் இருப்பதும் பயனளிக்காது.

     அயம், நாகம் இவற்றின் நட்பு பகைச் சரக்குகளே இவற்றிற்கும்.


Share:

தங்கம் (AURUM)

தங்கம் (AURUM)










                   செயலிலும் மதிப்பிலும் உயர்ந்தது தங்கம். உலோகங்களின் மன்னன் என்று பெருமையுடன் சொல்லப்டுகிறது. இயற்கையாக கிடைப்பது குறைவாக இருப்பதாலும் பல்வேறு சாயன்கள் இருப்பதாலும் இதன் விலை மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது.

             காய்ச்சினால்  சிவக்கும்,  வெட்டினால் வெளுக்கும். உரைத்தால் குங்குமப் பூ நிறமடையும், பாரமுள்ளதும் மழ மழப்பு, மெது தன்மை, மினுமினுப்பு உள்ளதும் தளமாகப் பிரியாமல் உள்ள தங்கமே சிறந்தது.

                    வெளுத்து வரண்டு, நிறம் குன்றி அழுக்குடனும், அடித்தால் தகடாகப் பிரிந்தாலும், உரைத்தாலும் காய்ச்சினாலும் வெளுத்துப் போகின்றதுமான தங்கம் நல்லதல்ல.

        ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூந்தம் என நான்கு வகைகள் தங்த்தில் உள்ளதாக கூறுகின்றனர். மற்ற எல்லா வகை பற்ப மருந்துகளும் வெள்ளை ண்ணத்திலும், செந்தூரங்கள் சிவப்பு வண்ணத்திலுமே இருக்கும், ஆனால் தங்கம் மட்டும் அதே பொன் வண்ணத்திலேயே இருக்கும்.

          பொன் சேகரிப்பவர், பொன் கலந்த மண்ணை பரந்த ஓடுகளில் இட்டு நீருடன் கலந்து, சுழற்றிக் சுழற்றிக் கொட்டுவர். பொன் கனமான பொருள் ஆகையால் மண்ணும் மணலும் நீருடன் கலந்து போகும் பொன் அடியில் நின்றுவிடும். பொன் பொடியையும் மற்ற நுண்ணிய பொடியையும் இப்படியாக பிரித்தெடுப்பார்கள். அதிலிருந்தும் அதிலிருந்தும் பொன்னைப் பிரித்தெடுக்க சிறந்த முறையாக கையாளப் பட்டதே புடமிடுதலாகும்.

     பொற்கலவையை உருக்கி நீட்டித்  தகடாக்கி குறிப்பிட்ட அளவு துண்டுகளாக தகடை புளி நீரால் களுவுவார்கள், பிறகு உப்பும், இரும்பும் கெந்தகமும் கலந்த செங்கற் பொடியில் இட்டு புரட்டுவார்கள். இரண்டு ஓட்டுச் சில்லுகளிடையில் வைத்துக் கீழே காற்றுப் புகும் தொளையுடைய அகன்ற சட்டி அல்லது ஓட்டில் வரட்டியின் அனலிடையே பல மணி நேரம் வைப்பார்கள். இப்படி நாற்பத்தியொருமுறை புடமிட்டால் பொன் கலவை மாசு நீங்கி பத்தரை மாற்று பொன் ஆகுமென்பர்.

                 இக்காலத்தில் மின் சக்தியைக் கொண்டு பெரும்பாலான வேலைகளை எளிதாக செய்கின்றனர். சுரங்கங்களில் உடைத்தெடுத்த பாறைத் துண்டுகளை ஆலையில் உள்ள அரவை இயந்திரத்தில் பொடி ஆக்குகின்றனர். வேகமாக ஓடுகின்ற நீர்க் குழாய்களில் அப்பொடி இழுத்துச் செல்லப்டும்.

         பொன் பொடி கலந்த நீரில் ஓடும் வழியில் பாதரசம் பரப்பிய பலகை இருக்கும் மணலிலுள்ள பொன் பொடிகளின் ஒரு பகுதி பாதரசத்துடன் சேர்கிறது. இந்தக் கலவையை உஷ்ணப்படுத்தி பாதரசத்தை தனியாகவும் தங்கத்தை தனியாகவும் சேகரிக்கின்றனர்.

      குழாய் வழியாக  செல்லும் பொன் பொடிகள் மயிர்க்கால் அளவு துளையுள்ள மெல்லிய சல்லடைகளில் அடிக்கப்படுகிறது. அவைகளை உலர்த்தி பொடிகளை உருக்குவர்.

            இந்த இரண்டு முறைகளிலும் தப்பிச் செல்லும் நுண்ணிய பொடிகளை தண்ணீரில் கரையக்கூடியதும், தங்கத்துடன் கலக்கக்கூடியதாகவும் உள்ள 'ஸயனைடு' என்கின்ற பொருளின் உதவியால் பிரித்தெடுக்கின்றனர். துத்தத்தின் மீது பொடியாய்ப் படிந்துவிடும்.

              இந்த மாதிரி மூன்று முறைகளில்  தங்கம் பிரித்தெடுக்கப் படுகிறது. இது ஓரளவு தரம் குறைவாகவே இருக்கும். தனித்தோ மற்ற பொருட்களுடன் கலந்தோ உருக்கப்படும் பொழுது தரத்தில் மாற்று உயரும்.

        தங்கத்தின் ஒப்ப எடை எண் (Specific Gravity) 19.32 ஆகும். 35.25 செ.மீ நீள அகல உயரமுடைய பொற்கட்டி ஒரு டன் எடை உள்ளதாக இருக்கும்.

     தங்கத்தின் தனிச்சிறப்பும் பெருமையும் கூடுவதற்கு முக்கியமானது, மினுமினுப்பும் எளிதில் பளபளப்பு கெடாத தன்மையும் ஆகும்.

    பொன்னின் இயற்கை நிறம் மங்கிய  பசுமையான மஞ்சள் நிறம். காற்றிலுள்ள உயிர்க் காற்றுடன் கலந்து களிம்பு பிடிக்காது.

             தங்கத்தில் வெள்ளி கலந்தால் பசுமையாகியும், வெளிறியும் தோன்றும். செம்பு கலந்தால் பழுப்பும் செந்நிறமும் அதிகமாகும். சுரங்கங்களில் பொன் உருகி ஓடும்போது பச்சைப் பசேலென ஒளி வீசுவது அதில் கலந்த வெள்ளி, துத்தம் முதலியவற்றாலேதான்.

          எல்லா  திடப்  பொருட்களும்  அமிலங்களில்  கரையும் தன்மை  உடையவை ஆனால் தங்கம் மட்டும் அமிலத்தில் கரையாது.

          தங்கத்துடன் எளிதில் சேரும் பொருட்கள் அரச நீரகம் (Agua Regia), பாதரசம், ஸயனைடு ஆகிய மூன்றாகும். உயர் வெப்ப நிலையுடைய இரு வகை அமிலங்களில் (Selleric Acid, Telluric Acid) கரையும் என்று சொல்லப்படுகிறது. கந்தக அமிலமும், நைட்ரிக் அமிலமும் கலந்த கலப்பு திராவகத்தில் போட்டு உஷ்ணப்படுத்தினால் கரையும்.

         ஒரு கிராம்  தங்கத்தை  கிட்டத்தட்ட  இரண்டரை  கிலோ  மீட்டர் தொலைவு நீளமுள்ள கம்பியாக நீட்ட முடியும் என்கின்றனர்.

        தங்கத்தின் தரத்தையும் மதிப்பையும் நம் நாட்டில் 'மாற்று' என்று சொல்வர். நல்ல தரமான தங்கம் 'பத்தரை மாற்றுப் பொன்' எனப்படும். கலப்புத் தங்கம் மாற்றுக் குறைந்தது எனப்படும். உரை கல்லில் வைத்து உரசிப் பார்த்து இதன் தரத்தை அறிகின்றனர்.

         தற்போது வேறு முறையிலும் துல்லியமாக அறிகின்றனர். 24 Carat சுத்தமான தங்கம் இது மிக எளிதாக வளையவும் நசுங்கவும் கூடியது. அதனால் தங்க நகைகள் போன்றவற்றை செய்வதற்கு சற்று மாற்று குறைந்த 22 Carat தங்கம் பயன்படுத்துகின்றனர்.

" அடற்றா வரவிடங்க ளங்கவொளி மங்கல் 

   கடந்தாமுந் தோடகயங் காச -- முடற்பஞ் 

   சேகையிருந் தாதுநட்டந் திட்டிநோ யீளையிவை 

   யீகைபிருந் தாலேகு மென். "

          வெப்ப  வீரியமும்  இனிப்புச்  சுவையும் இருந்தாலும் மற்ற இனிப்புச் சுவை பொருட்கள் போல் கபத்தை கூட்டாது.

          தாவர விஷங்கள், உடலில் ஒளிக் குறைவு, சன்னி, இளைப்பு நோய், காசம், உடல் வெப்பம், முதிர்ந்த கபம், தாது நட்டம், கண் நோய், கோழைக்கட்டு போக்கும்.

         மாசை மீதகம், பீதம் மாடை, மாடு வேங்கை, ஆசை, சுவணம், காரம், அருத்தம், காஞ்சனம், காணம், தேசிகம், கனகம், கைத்து, செந்தாது, பொலம், அத்தம், சாமி, வித்தம், தனம், உடல், பண்டம், இரணியம், நிதி, வெறுக்கை, ஈகை, கல்யாணம், ஓமம், சந்திரம், சாம்பூந்தம், பூரி, ஈழம், திரவியம், சாதரூபம், செங்கோல், நிதானம், மாழை, அரி, தடனியும், தமனியம், ஆடகம் என்ற பல பெயர்களால் இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.

         இரச காரசாரங்கள் நட்புச் சரக்குகள் ஆகும். முட்டை ஓடு, அப்பிரகம், கெந்தகம், காந்தம், குதிரைப் பல் பாஷாணம், கோமுகப் பாஷாணம், கௌரி பாஷாணம், சவுட்டுப்பு, மிருதார் சிங்கி, மனோசிலை, சூதம், தாளகம், நாகம், நிமிளை, பொன்னம்பர், வீரம், வெடியுப்பு, வெள்ளைப் பாஷாணம், வங்கம், துருசு, லிங்கம் முதலியன பகைச் சரக்குகளாம். 


Share:

துரிசு(CUPRIC SULPHATE)


 துரிசு 
 (CUPRIC SULPHATE)










      மயில்துத்தம், கண்டர், நற்பச்சை என்ற பெயர்களும் இதற்குண்டு. இது இயற்கையாகவும் உண்டாகிறது.

    செம்புடன் கெந்தகத் திராவகம் கலந்து காய்ச்சி எடுத்து உப்பாக்கியும் கடைகளில் விற்கப்படுகிறதாம். இது நீல நிறமாக இருக்கும். தண்ணீரில் கரையும். இதற்கு ஒருவிதத் துவர்ப்பும், வெருட்டலும் உண்டு.

    துரிசை  நெருப்பிலிட்டால்,  துரிசிலுள்ள   நீர்  நீங்கி   பச்சையும் வெள்ளையும் கலந்த சாயலாக இருக்கும். நெருப்பு அதிகமானால், அதிலுள்ள திராவகம் நீங்கிச் செம்பு வண்ணமுள்ள தூளாகும்.

" புண்ணாற்றுங் காமியத்தின் புண்ணாற்றுங் கண்ணோயை 

   விண்ணேற்று முத்தோட வீறடக்குஞ்---சண்ணுகின்ற 

   வாந்தியொடு பேதிதரும் வாய்நோய் சுரந்தணிக்கும் 

   காந்தி தருந்துரிசு காண்."

      ரணம்,  கண்நோய்,  திரிதோசம்,  காய்ச்சல்,  வாய்ப்புண்  முதலியன போக்கும் வாந்தி பேதி உண்டாக்கும்.

      சவிட்டுப்பு,  தொட்டிப்  பாஷாணம்,  அஞ்சனக்கல்,  வெடியுப்பு,  சூடன், அப்பிரகம், சீனம், வெள்ளைப் பாஷாணம், கல்லுப்பு, மிருதார் சிங்கி, காந்தம், இந்துப்பு, நாகம், வங்கம், சவுக்காரம் முதலியன பகைச் சரக்குகளாகும்.

     அரிதாரம்,  நவச்சாரம்,  வெண்காரம்,  வீரம், கெந்தி, சூதம், பூரம், சிலை, கௌரி, நிமிளை,  இலிங்கம்  முதலியன  நட்புச் சரக்குகளாகும்.



Share:

செம்பு(COPPER)


 செம்பு 
 (COPPER) 










        சுரங்கங்களில்  கிடைக்கின்ற  இந்த  உலோகம்  நாம்  அதிகமாகப்  பயன்படுத்தக்கூடிய உலோகம்.  இது  தங்கம்,  வெள்ளி,  வெண்வங்கம்,  காரீயம்,  நாகம்,  இரும்பு,  நிமிளை,  கெந்தி  முதலிய  பொருட்களுடன்  கலந்து  கிடைக்கிறது.  இக்கலப்பிலிருந்து  செம்பை  தனியாகப்  பிரித்தெடுக்கின்றனர்.

           வட  அமெரிக்காவிலும்,  நேபாளத்திலும்  செம்புத்  தாது  அதிகமாக  கிடைக்கிறது.   இதில்  நேபாளத்தில்  கிடைப்பதுவே  அன்றும்  இன்றும்  சிறந்த  வகை  என்று  (அன்றும் -  இன்றும்)  சொல்லப்படுகிறது.   'இங்கிலீஸ்  முறை,  ஜெர்மன்  முறை'  என  இரு  முறைகளில்  கலப்புத்  தாதுவிலிருந்து  செம்பு  பிரிக்கப்பட்டு  நமக்கு  கிடைக்கிறது.  

            இது  வெடியுப்பு  திராவகத்தில்  மட்டுமே  கரையும்.  இது  கரையும்  போது  சிவந்த  புகை  உண்டாகும்.   கெந்தக  திராவகத்தில் காய்ச்சும்  போது  1090 டிகிரி  வெப்பம்  தேவைப்படும்.

          இந்திரகோபம் (பட்டுப்பூச்சி),  பூநாகப்  பூச்சி (நாங்கூழ் பூச்சி),  மயில்  இறகு,  தலை  மயிர்  மற்றும்  சில  மூலிகைகளிலிருந்தும்  செம்புச்  சத்து  எடுக்கப்படுகிறது.

        சுத்தமாக  தூய்மை  செய்யப்பட்ட  செம்பானது  வெள்ளி,  தங்கம்  முதலியவைகளுடன்  மிதமான  அளவோடு  முறையாக  சேர்க்கப்பட்டால்  அதற்குரிய  குணத்தைப்  பெறுகிறது.

             தாமிரம்,   அவுதும்பம்,   உதும்பம்,   இரவி,   ராசி,   இரவிப்பிரியம்,  எருவை,  சீருணம்,  சீருணி  கற்பம்,  சுலபம்,  தாம்பிரம்,  பரிதி,  விடம்  என்ற  பெயர்களும்  செம்புக்கு  உண்டு.

             வெப்ப   வீரியமுள்ள  இது  கார்ப்புச்  சுவையுடன்  இருக்கும்.  இது  வெப்ப  உடலினர்க்கு  ஆகாது.  வாந்தி  உண்டாக்குவது  இதன்  தீய  குணமாகும்.


" தாம்பரத்தாரற்  சோரிபித்தஞ் சந்நி    வழுவைகபம் 

  வீம்பார்பி  லீகமந்தம்  வெண்மேகந் --- தேம்பழலை

  சூதகநோய்  புண்கிரந்திதோடசுவா  சங்கிருமி

  தாதுநட்டங்  கண்ணோய்போஞ்  சாற்று. "  


          குட்டம்,  பெருநோய்,  பித்தவிகற்பம்,  கபவிகற்பம்,  செந்நீர்ப்பித்தம்,  பெருவயிறு,  குன்மம்,  புண்கள்,  தாது  இழப்பு,  இருமல்,  ஈளை,  இளைப்பு,  கண்நோய்  முதலியவைகளைப்  போக்கும்.

                அயம்,  சூதம்,  தங்கம்,  நாகம்  முதலியன  நட்புச்  சரக்குககள்.

                காரீயமும்,  வெடியுப்பும்  பகைச்  சரக்குகள்.

        இந்த  உலோகத்தில்  வெளுப்பாக  அல்லது  கருப்பாக  உள்ளதும்,   அடித்தால்  விரிந்து  கொடுப்பதும்,   கழுவக்  கழுவக்  கருத்துக்  காணப்படுவதும்  மருத்துவத்திற்கோ  வேதியியலுக்கோ   பயன்படாது.




Share:

துத்தநாகம்(ZINCUM)


 துத்தநாகம் 
 (ZINCUM) 










       இயற்கையாக    பூமியில்    கிடைக்கும்,     ஆனாலும்    மற்ற பொருட்களுடன்   கலந்தே   கிடைக்கின்றது.  மற்ற  பொருட்களை    நீக்கி  நாகத்தை   மட்டும்   பிரித்த  பிறகு    இது    வெள்ளையும்   நீலமுமம்  கலந்த   நிறமாகவும்,   பளபளப்பாகவும், கட்டியாகவும் இருக்கும். இதைக் கம்பியாக  நீட்டவும்,  தகடுகளாக அடிக்கவும் முடியும். இது திராவகங்களில் கரையும். காற்றுப் பட்டால் நாளடைவில் இதன் மேல் உப்புப் பூத்துவிடும்.

நாகத்தில் இரு வகைகள் உண்டு :   

1.பெரு கண் நாகம்.

2.சிறு கண் நாகம்.

         அணுக்கள் அடங்கிய சிறு கண் நாகத்துடன் செம்பு சேர்த்து உருக்கும் போது நமக்கு பித்தளை என்ற உலோகம் கிடைக்கும்.

     இதை உருக்கும்போது பாம்பு போல சீறும். அதனால் நாகம் என்று பெயரிட்டிருக்கலாம், துத்தநாகம் என்ற பெயரும் உண்டு. சீறல், பொருமல், பொங்கல், இரைச்சல், ஐம்புகை, சோரம், வாசுகி, வெண்நாகம், தாம்பிரத்தின் பேதை, வாதத்திற்கு உயிர் என்கிற பெயர்களாலும் நூல்களில் குறிப்பிடப்படுகின்றது.


" மேகங்  கிளர்பேதி  வெட்டையழ   லைத்தணிக்கும்

 வேகங்கி  ராணி  விலக்குங்காண்--போகாப்

 பரியமுலைப்  புண்ணைப்  பயித்தியத்தைப்  போக்கு

 மரியதுத்தி  நாக  மது."


     மேகம், பேதி, வெள்ளை, உட்சூடு, முளைப்புண், பித்தம் முதலிய நோய்களைப் போக்கும். இரத்தப் பெருக்கை தன்மையும், உடலை தேற்றும் தன்மையும் இதற்கு உண்டு.

            அண்டம், அபினி, அன்னபேதி, கல்லுப்பு, கிளிஞ்சல், சிங்கி, தங்கம், தரா, நண்டு ஓடு, மிளகு, வளையலுப்பு, வீரம், வெடியுப்பு, வெண்காரம், வெள்ளி, வெள்ளைப் பாஷாணம் முதலியன நாகத்தின் பகைச்சரக்குகள் ஆகும்.

    அப்பிரகம், இரும்பு, கெந்தி, காந்தம், காரீயம், கௌரிப் பாஷாணம், நவச்சாரம், சிலாசத்து, சூதம், செம்பு, மயூரச் செம்பு முதலியன நட்புச் சரக்குகளாகும்.



Share:

உப்பை உலோகமாக்க முடியுமா?


 உப்பை உலோகமாக்க முடியுமா? 






*       உலோகத்தை உப்பாக மாற்றம் செய்ய முடியும் ஆனால் உப்பை ஏன் உலோகம் ஆக்க முடியாது? இப்படி நாம் அனைவருமே கேள்விகளை மட்டுமே கேட்கிறோம்.

*   தமிழ்நாட்டு சித்தர் உப்பை உலோகமாக்கினர் என்பதை சித்தர் புத்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால் தற்போதுள்ள வேறு எந்த இரசவாதியும் உப்பை உலோகமாக மாற்றும் முறையை அறிந்திருந்தால் எனக்கும் அவர்களை பற்றி கூறுங்கள் நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

*   இன்னும் சிலர் சித்தர்கள் செய்த இரசவாதமே பொய் என்றும் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

*      நானும்  உப்பை உலோகமாக மாற்ற முடியுமா? என முயற்சித்த என் சொந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

*           துரிசு, மயில்துத்தம் என அதிகம் தமிழில் அழைக்கப்படும். இந்த காப்பர் சல்பேட் உப்புக்கு இன்னும் பல தமிழ் பெயர் உண்டு. இதை ஆங்கிலத்தில் காப்பர் சல்பேட் எனவும், குப்ரிக் சல்பேட் என்றும் சொல்லப்படும். காப்பர் சல்பேட்டில் காப்பர் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்தது ஆனால் அதிலிருக்கும் செம்பை எப்படி செம்பு உலோகமாக மாற்றுவது? என நான் முயற்ச்சி செய்து பார்த்தேன் ஒரு கிலோ காப்பர் சல்பேட்டில் இருந்து சுமார் இருநூறு கிராம் காப்பர் உலோகமாக மாற்றி உருவாக்க முடிகிறது.




Share:

கந்தகம் (SULPHUR)


 கந்தகம் 
 (SULPHUR) 











       இயற்கையாக உருவாகும் பொருள்களில் முதன்மையானது கெந்தகம். இது தாவரப் பொருட்களிலிருந்தும் இணைந்தும் கிடைக்கிறது.

      முட்டையின் வெள்ளைக்கரு, வெள்ளைப் பூண்டு, வெங்காயம் முதலிய பொருட்களில் இணைந்திருக்கிறது. இரும்பு, செம்பு, ஈயம், இரசம் முதலிய உலோகங்களோடு கலந்து தாதுவாக கிடைப்பதைப் பிரித்தும் கெந்தகத்தை எடுக்கின்றனர்.

     கடையில்  விற்கப்படும்  கெந்தகத்தில்  அயம்,  நாகம், பாஷாணம், சுண்ணாம்பு முதலிய குற்றங்கள் உள்ளன. எனவே உருக்கியாவது அல்லது வாலையிலிட்டு இறக்கியாவது பதப்படுத்தி உபயோகிக்க வேண்டும்.

     கோழித்தலை கெந்தகம், அமரசிலைக் கெந்தகம், காட்டுக் கெந்தகம், நெல்லிக்காய் கெந்தகம், வாணக் கெந்தகம் (குழாய் கெந்தகம்) எனப் பல வகை உண்டு. சிவப்புக் கெந்தகம், பசுமை நிறமான (பீத) கெந்தகம், வெள்ளைக் கெந்தகம், ஊதா கெந்தகம் என நான்கு வண்ண வகைகள் உண்டு.

       சிவப்புக் கெந்தகம்  இரவு  நேரத்திலும்  விளக்கு  போல்  ஒளியுள்ள வெளிச்சம் தரக்கூடியதாக இருக்கும். தங்கச் சுரங்கங்களில் மட்டும்தான் இது கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலானோர் இதை கண்டதே இல்லை எனவும் சொல்லப்படுகிறது.

       கிடைக்கின்ற  மஞ்சள்  நிற  கெந்தகத்தைக்  கொண்டுதான்  சிவப்பு, வெள்ளை, கறுப்பு என்கின்ற மூன்று வகைக் கெந்தகங்களும் செயற்கையாக செய்யப்படுவதாகவும் கூறுகின்றனர்.

        காரிழையின்  நாதம்,  பறைவீரியம்,  அதீதப் பிரகாசம்,  பீஜம்,  செல்வி விந்து, சக்தி, சக்தி பீஜம், செந்தூரத்தாதி, தனம், தேவியுரம், நாதம் நாற்றம், பறை நாதம், பொன் வர்ணி, இரச சுரோணிதம் என்ற பெயர்களாலும் இதை அழைக்கப்படுவதுண்டு.

       துவர்ப்பு, கைப்புச் சுவையுள்ள இது பித்த நீரை அதிகப்படுத்துதல், மல மிளக்கல், உடல் தேற்றல், வியர்வை உண்டாக்குதல் முதலிய செய்கைகளைக் கொண்டது.

" கட்டிச் சொறிசிரங்கு காணும் கிரந்திவகை

   குட்டங் குறைநோய் குழிரணமும் -- வட்டமிட்டே

   வந்த புரைபுண்கள் வாய்கதறி யோட்டமிடும் 

   கெந்தகத்தின் பண் பிதுவேகேள்."

         கட்டி,   சொறி,   சிரங்கு,   கிரந்தி,   குட்டம்,  குழிவிழும்  ரணங்கள், வட்டமிட்டு  வருகின்ற செம்படை, கரும்படை ஆகியவை தீரும் எனப்படுகிறது.

          தாய்  தன்  குழந்தையை  வளர்பது  போல  நோய்களின் வெப்பத்தை மாற்றி உடலைத் தேற்றுவிக்கிறது. பதினெட்டு வகைக்குட்டம், கல்லீரல் வீக்கம், பெருவயிறு, கண்நோய்கள், நாட்பட்ட மேக நோய்கள், நச்சுகடிகள், வாதசுரம், சுவாச காசம், இருமல், மாரடைப்பு, பேதி, நாட்பட்ட கழிச்சல் முதலிய நோய்களுக்குக் கொடுக்கலாம். மருந்தின் அளவு கூடினால் பேதியாகும்.

          இது எளிதில் நெருப்பு பற்றக்கூடியது, 300 டிகிரி வெப்பத்தில் எரியும், இதன் சுடர் மங்கலான நீல நிறமாக இருக்கும். இது அதிக வெப்பத்தால் எரித்தால் ஊதா நிறமாக எரியும். 180 டிகிரியில் எரித்தால் ஆவியாக எழும்பத் தொடங்கும். 216 டிகிரியில் இளகும். 226 டிகிரிக்கு மேல் 280 டிகிரி வரை எரிக்கப்பட்டால் முழுவதும் தண்ணீர் வடிவாகி, இலேசான மஞ்சள் நிறத்துடன் இருக்கும்.

       இதன்  கொதி  நிலையாகிய  450 டிகிரியில்  இருந்து  600 டிகிரி வரை எரித்தால் இலேசான நீரின் வடிவத்தை அடைந்துவிடும். இந்தநேரத்தில் காற்றை வெளிப்படுத்தினால் எவ்வித மாறுதலும் இல்லாமல் கமலாப்பூ நிறமான பக்குவத்தை அடைந்துவிடும்.

    இரசவாதத்திற்கு  முக்கியமான  இரண்டு  பொருட்கள் கெந்தகமும், பாதரசமும் ஆகும்.

    வெள்ளியை ஒரே தடவையில் தொடக்கத்திலேயே சிவப்பாக்கி விடும் மருந்தை கண்டுபிடிப்பது கடினம் என்றாலும் முதலில் கறுப்பாக்கி பிறகு சிவப்பாகும் பொருளாவது தேவையல்லவா? இதில் சிறப்பானது கெந்தகமாகும்.

    கெந்தகத்தை   அரைத்து வெள்ளியில் பூசி புடமிட்டாலும். அல்லது வெள்ளியை உருக்கி கவளம் கொடுத்தாலும் அதைக் கறுப்பாக்கிவிடும். பிறகு அதை ஓட்டில் வைத்து ஊதி எடுத்தால் மஞ்சள் நிறமுண்டாகும்.

     இந்த கெந்தகத்தில்   ஒரு  பெரிய குறைபாடு அல்லது இழி குணம் இருக்கிறது.  எந்தப் பொருளில் இது சேர்க்கப்படுகிறதோ அல்லது கொடுக்கப்படுகிறதோ அந்தப் பொருளை வெட்டையாக்கி விடுகின்றது. வெள்ளியை உருக்கி கெந்தகத்தை சேர்த்தால், வெள்ளியில் அதிக வறட்சியை உண்டாக்கி அதை வெட்டையாக்கி விடுகிறது.

     ஆகவே   இதன்  கெட்ட  குணத்தை   போக்குவதற்கு  பக்குவம் செய்யும்போது இதன் நல்ல குணங்களும் நீங்கி விடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பக்குவ முறைகளைத் தான் கட்டு, செந்தூரம், பற்பம் முதலிய பல முறைகளாக இரசவாத மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.






Share:

கறியுப்பு (SODIUM CHLORIDUM)

கறியுப்பு (SODIUM CHLORIDUM)



     காய்கறிகளுடன்  சேர்த்து  உபயோகிப்பதால்  கறியுப்பு  எனப்படும். உணவில்  சேர்ப்பதால்  சோற்றுப்பு எனப்படும்.

       இந்த உப்பு பெரும்பாலும் கடல் நீரிலிருந்து எடுக்கப்படுகிறது. கடலுக்கு அருகிலுள்ள உப்பளங்களில் பாத்திகள் கட்டி, கடல் நீரை அவற்றில் பாய்ச்சுவார்கள். அந்த நீரானது சூரிய வெப்பத்தால் ஆவியாகிப் போனவுடன் அதில் கரைந்திருந்த உப்பு தனியாகத் தங்கிவிடுகிறது.

        கறி உப்பு தனது எடையில் மூன்றில் ஒரு பங்கு குறைவான எடையுள்ள தண்ணீரில் கரைந்து போகும். நெருப்பில் வைத்து எரித்தால் படபடவென வெடிக்கும். பழுக்கக் காய்ச்சினால் உருகி ஓடிப் போகும். பொதுவாக உப்பைக் கரைத்து தெளிவை இறுத்திக் காய்ச்சிக் கொள்வதால் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.


" மந்தம் பொருமலறும் வாயுவும்போந் தீபனமாந்

  தொந்தித்த வையந் தொடருமோ --- சந்ததமு

  மக்கினியின் புட்டியடருங் கறியுப்பாற்

  சிக்குகின்ற நீரிறங்குஞ் செப்பு."


      கறியுப்பினால்  அஜீரணம்,    வயிற்றுப்பிசம்,  வாத  கபம்,  நீரடைப்பு இவைகள் போம்.  பசியும் சமாக்கினியும் விருத்தியாகும், கிருமி நாசினி, மலகாரி, வமனகாரி.

     இந்த  உப்பில்  சவுட்டுப்புச் சத்தும், காற்று வடிவமான ஒருவகைப் பொருளும் உண்டு. ஆகையால் காரசாரப் பொருட்கள் தயாரிக்கவும், பக்குவப்படுத்தவும் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது,



Share:

வெள்ளீயம்(TIN STANNUM)


வெள்ளீயம்
(TIN STANNUM





      இது ஈய வகையைச் சேர்ந்தது. கருப்பாக இருப்பது காரீயம் எனவும் வெள்ளையாக இருப்பது வெள்ளீயம் எனப்படுகிறது.

    வெண்மையான நிறம், கனம், நயப்பு, நெய்ப்பு, குளிர்ச்சி, விரைவில் உருகுதல், ஓசையில்லாமை முதலிய குணங்கள் கொண்டது மிகச்சிறந்தது.

      வெளுப்பும் கறுப்பும் கலந்த நிறமுள்ளது, தரத்தில் குறைந்தது, மருத்துவ முறைக்கு உதவாது.

     மிகச்சிறந்ததை குரகம் என்றும், பயனில்லாததை மிஸ்ரம் (கலப்புள்ளது) என்றும் ஆயுர்வேத முறைகளில் கூறப்படுகிறது.


" தாகங்  கரப்பான்  சலமேகம்  பித்தகப

  மேக  மொளிமங்கல்  வெப்பபல--மாகிரந்தி

  துள்ளியமந்  தார  சுவாசமுமந்  தாக்கினியு

  வெள்ளீயம்  போக்கும்  விதி."


         நாவரட்ச்சி,  கரப்பான்,  நீர்ப்பிரமேகம்,  பித்தகபத்  தொந்தம்,  மேகம்,  உடல்  பளபளப்புக்  குறைதல்,  சுவாச  காசம்,  அக்கினி  மந்தம்  முதலிய  நோய்களைப்  போக்கும்.  குறிப்பாக  பிறப்பு  உறுப்பு  நோய்கள்,  சிறுநீரகக்  கோளாறுகளுக்குப்  பயன்படுத்தப்படுகிறது.  மேலை  நாட்டினர்  கட்டிகளைப்   கரைக்கப்  பயன்படுத்துகின்றனர்.

      கைப்புச்சுவையும்,  வெப்ப  வீரியமும்  உள்ள  இது  வீக்கத்தைக்  குறைத்தல்,  கிரிமிகளைக்  கொல்லுதல்,  உயிர்த்தாது  வெப்பத்தைத்  தணித்தல்  ஆகிய  செயல்களைக்  கொண்டது.

            வெண்வங்கம்,  வெண்நாகம்,  குடியம்,  தவள  வங்கம்,  பாண்டி,  மாரசம்  என்ற  பெயர்களும்  இதற்குண்டு.

       அப்பிரகம்,  அண்டம்,  அயம்,  கல்லுப்பு,  கெந்தி,  காந்தம்,  கிளிஞ்சல்,  கௌரி,  நத்தை,  நிமிளை,  வெடியுப்பு,  கல்நார்  முதலியன  பகைச்  சரக்குகள்.

       சூதம்,   நாகச்செம்பு,  பூநாகம்,   மயூரச்  செம்பு,  வெள்ளி,  காரீயம்  முதலியன  நட்புச்  சரக்குகள்  ஆகும்.



Share:

AT 9

AT 2

''I cannot teach anybody anything, I can only make them think.''

AT 6

Follow by Email

Subscribe To Get All The Latest Updates!

email updates

Social Meadia

Blog Archive

New Posts

AT 7